Honda-வின் பம்பர் சலுகை: Honda Activa 6G-யில் 5000 ரூபாய் cashback, இன்னும் பல ஆஃபர்கள்

ஆக்டிவாவின் அற்புதமான பயணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு அழகான பயணம் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆத்சுஷி ஒகாதா தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2021, 02:00 PM IST
  • நிறுவனம் ஆக்டிவா 6 ஜியின் 20 வது ஆண்டு பதிப்பை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
  • ஹோண்டா ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டர் வாங்குவதற்கு நிறுவனம் 100 சதவீத நிதி உதவியை வழங்குகிறது.
  • லாக்டௌனின் போது நிறுவனம் ஆக்டிவாவின் விலையை அதிகரித்திருந்தது.
Honda-வின் பம்பர் சலுகை: Honda Activa 6G-யில் 5000 ரூபாய் cashback, இன்னும் பல ஆஃபர்கள்  title=

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI), Activa ஸ்கூட்டர் பிராண்டின் 20 ஆண்டுகால நிறையவைக் குறிக்கும் வகையில், ஆக்டிவா 6 ஜி சிறப்பு பதிப்பை (Activa 6G) அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் சிறந்த சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டர் வாங்குவதற்கு நிறுவனம் 100 சதவீத நிதி உதவியை வழங்குகிறது. அதனுடன் ரூ .5000 கேஷ்பேக்கும் கிடைக்கிறது. டெபிட் அல்லது கிரெடிட் கார்டு EMI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கேஷ்பேக் கிடைக்கும்.

இந்த ஸ்கூட்டரின் (Scooter) விலையைப் பற்றி பேசினால், இந்த ஸ்கூட்டர் STD மற்றும் DLX என இரு வகைகளில் வருகிறது. அவற்றின் விலை முறையே ரூ .66,799 மற்றும் ரூ .68,544 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.

இவைதான் முக்கிய அம்சங்கள் (Honda Activa Specs)

Honda Activa-விற்கு நாடு முழுவதும் 2.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இந்த அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் நாட்டில் 20 ஆண்டுகால பயணம் ஆகியவற்றை கொண்டாடும் நிகழ்வில், ​நிறுவனம் ஆக்டிவா 6 ஜியின் 20 வது ஆண்டு பதிப்பை அறிமுகப்படுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்டிவாவின் இந்த அற்புதமான பயணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு அழகான பயணம் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆத்சுஷி ஒகாதா தெரிவித்தார்.

ALSO READ: பெட்ரோல், டீசல் வாகனம் Vs மின்சார வாகனம்.. ஒரு அலசல்..!!!

ஹோண்டா ஆக்டிவாவின் விலை

ஹோண்டா இந்தியாவின் கனவுகளின் சக்தியை உணர்ந்து அதன் முதல் மாடலான ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து இன்று வரை, ஹோண்டா ஆக்டிவா இந்தியாவின் ஒவ்வொரு புதிய தலைமுறையினருடனும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பத்தை நேரத்திற்கு முன்பே வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) 125 BS VI பதிப்பின் விலையை நிறுவனம் ரூ .955 அதிகரித்தது. அதே நேரத்தில், BSVI Honda Unicorn பைக் மற்றும் BSVI Dio ஸ்கூட்டரின் விலையும் திருத்தப்பட்டது. முன்னதாக, லாக்டௌனின் போது நிறுவனம் ஆக்டிவாவின் விலையை அதிகரித்திருந்தது.

ஹோண்டா ஷைனில் சலுகை

ஹோண்டா ரூ .2,499 வரையிலான டௌன்பேமெண்ட் வசதியையும் வழங்குகிறது. இதற்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். ஆக்டிவா 6 ஜி தவிர, நிறுவனம், மிக அதிக அளவில் விற்பனை ஆகும் தனது ஹோண்டா ஷைன் 125CC பைக்கிலும் இதே சலுகையை வழங்குகிறது. விலை பற்றி பேசுகையில், ஹோண்டா ஷைனின் விலை ரூ .70,478 முதல் தொடங்குகிறது.

ALSO READ: அறிமுகமானது Electric SUV New ZS EV 2021, எவ்வளவு கிலோமீட்டர் கொடுக்கும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News