இளைஞர்களே உஷார்! இந்த விஷயங்களை தினமும் செய்து வந்தால் உடனே மாற்றுங்கள்!
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மூளையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம், எனவே மூளையை பாதிக்கக்கூடிய சில விஷயத்திலிருந்து ஒதுங்கியிருங்கள்.
1) நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மூளையில் தீங்கு விளைவிக்கும், இது நினைவகம் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். 15 முதல் 30 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும், நீண்ட நேரம் அமர்வது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் எழுந்ததும், சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் வீட்டைச் சுற்றி நடக்கலாம், கிச்சன் கவுண்டருக்கு எதிராக புஷ்-அப் செய்யலாம், தொடர்ச்சியாக ஸ்குவாட்ஸ் போன்ற பயிற்சிகளை செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
2) தனிமைப்படுத்தப்படுவது சோக உணர்வுகளுடன் தொடர்புடையது மற்றும் அல்சைமர் நோய்க்கான அதிக பாதிப்புடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. வரையறுக்கப்பட்ட சமூக தொடர்புகளைக் கொண்ட நபர்கள் மூளையில் அதிக சாம்பல் நிற இழப்பை அனுபவிக்கிறார்கள், இது நினைவுகளை இழக்க செய்கிறது. இதற்காக நீங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு வசதியான மனம் விட்டு பேசக்கூடிய இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கலாம்!
3) ஹாம்பர்கர்கள், பொரியல், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவது உங்கள் மூளையில் பாதிப்பு ஏற்படுத்தும். பெர்ரி, முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமானால் நீங்கள் துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
4) வயது மூத்தவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பரிந்துரைக்கப்பட்ட ஏழு முதல் எட்டு மணிநேரம் தூக்கத்தை சரியாக அடையவில்லை. இரவில் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் போது நினைவாற்றல், பகுத்தறிவு போன்ற திறன்கள் குறைவதாக கூறப்படுகிறது. தூக்கம் தான் ஒருவரது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். உறக்கத்திற்கான கூடுதல் நேரத்தை நீங்களே அனுமதிப்பது மிகவும் பயனுள்ள உத்தியாகும். வழக்கமாக உறங்கும் நேரத்தை விட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தூங்க செல்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
5) தொடர்ச்சியான மன அழுத்தம் நரம்பணு உயிரணு இறப்பை ஏற்படுத்தும் மற்றும் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸின் அளவைக் குறைக்கும். இது நினைவுத்திறன் மற்றும் கற்றல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரின் சூழ்நிலைகள், தனிப்பட்ட ஆசைகள் அல்லது விருப்பங்களுடன் ஒத்துப்போகாத போதெல்லாம் மன அழுத்தத்தை உயர்த்தும் பாதகமான எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆழமான மூச்சை இழுத்து, தியானம் செய்வது மன அழுத்தத்தை போக்க உதவும்.
6) இயர்பட்கள் மூலம் அதிக ஒலியில் அரை மணி நேரம் கேட்பது உங்கள் செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கு செவித்திறன் இழப்பு அல்சைமர் நோய் மற்றும் மூளை திசுக்களின் சரிவு உள்ளிட்ட அறிவாற்றல் சிக்கல்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. அதிக ஒலிகளை கேட்கும்போது மூளையின் நினைவுத்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. உங்கள் செவித்திறன் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சாதனத்தின் அதிகபட்ச திறனில் 60 சதவீதத்திற்கு மேல் ஒலியளவைக் குறைப்பது மற்றும் நீண்ட நேரங்களுக்கு ஹெட்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
7) இயற்கை வெளிச்சம் போதிய அளவில் இல்லாமல் இருப்பது மனச்சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் உங்கள் மூளையின் செயல்பாடு எதிர்மறையாக பாதிக்குப்படும். மூளையின் செயல்திறனைப் பராமரிப்பதில் சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஏராளமான பலனளிக்கும் இந்த கார்டு... எப்படி விண்ணப்பிப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ