நியூடெல்லி: உங்கள் உணவை எப்படி சமைக்கிறீர்கள் என்பது, அது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை தீர்மானிக்கிறது. உணவை சமைக்கும்போது, சில இரசாயன எதிர்வினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாம் சமைக்கும் உணவு அனைவருக்கும் உண்ணக்கூடியதாக இருக்கவேண்டும், அது நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கக்கூடாது.
சமைப்பது ஒரு கலை மற்றும் அறிவியல் என்று சொல்லலாம். எந்த உணவையும் ஆரோக்கியமான முறையில் சமைக்க, அந்த உணவுப் பொருளின் அறிவியலைப் புரிந்து கொள்வதும் அவசியம். ஏனெனில் நம் சமையலறையில் உள்ள உணவுகள் சூடுபடுத்தும் போது அவை வினைபுரியும்,
சில உணவுகள் சூடுபடுத்தும் போது நன்றாக மாறும், ஆனால், சில உணவுகளை சமைத்த பிறகு சூடுபடுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சூடாக்கக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
எந்தெந்த உணவுகளை சூடாக்கக்கூடாது?
தேன்
தேன் சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்று, ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. பச்சை தேனில் இயற்கையான சர்க்கரைகள், நீர், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தேசிய பயோடெக்னாலஜி மையத்தின்படி, தேனை சூடாக்குவது அதன் தரத்தை குறைத்து அதன் நொதிகளை குறைக்கிறது. இது தவிர, அதை சூடாக்குவது அல்லது சமைப்பது நச்சுத்தன்மையுடையதாக மாறும், தேனை சூடுபடுத்தும்போது, அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. எனவே தேனை அப்படியே சாப்பிட வேண்டும். அதோடு, தேன் சேர்த்த உணவுகளை சூடுபடுத்தக்கூடாது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்றால், அவ்வாறு செய்வதை நிறுத்துங்கள், ஏனெனில் ப்ரோக்கோலியை பச்சையாக சாப்பிடுவது சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், அதை கொதிக்க வைப்பது வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை அழிக்கிறது.
ப்ரோக்கோலியை வேகவைப்பதும் மைக்ரோவேவ் செய்வதும் அதில் உள்ள குளோரோபில் இழப்பை ஏற்படுத்துவதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காய்கறிகளை பச்சையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது குளோரோபில். ஊட்டச்சத்துக்காக சாப்பிடும் பொருளில் இருந்த ஊட்டச்சத்தை நாமே வெளியேற்றலாமா?
மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்!
பாதம் கொட்டை
அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக பாதாம் ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது, ஆனால் பாதாமை வறுப்பதால் அவற்றில் உள்ள ஆரோக்கியமான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் சேதமாகிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் பாதாமை எப்போதும் தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட வேண்டும். பாதாம் சாப்பிடுவதற்கு இதுவே ஆரோக்கியமான வழி.
குடைமிளகாய்
கேப்சிகம் கவர்ச்சியாகத் தோன்றலாம் ஆனால் இது மிகவும் சத்தான காய்கறி. இது. இந்தியாவிலும் விளைகிறது. குடைமிளகாயை அதிக நேரம் சமைத்த பிறகு சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்துக்களை குறைக்கிறது. உண்மையில், வைட்டமின் சி ஏராளமாக கொண்டது குடைமிளகாய், இது நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து ஆகும், அதை அதிகமாக சூடாக்குவது அதன் பண்புகளை குறைக்கிறது.
பீட்ரூட்
இனிப்பு சுவை கொண்ட சிவப்பு பீட்ரூட் பெரும்பாலான மக்கள் விரும்பும் காய்கறி. பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது அழிக்கப்படுகின்றன. எனவே, பீட்ரூட்டை சமைக்காமல் பச்சையாகவும் உட்கொள்ள வேண்டும் என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
மேலும் படிக்க | எலும்பை பலவீனப்படுத்தும் இந்த உணவுகளை தொடவே தொடதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ