ஓய்வு காலத்தில் டென்ஷன் வேண்டாம்... அரசு வழங்கும் 4 சிறந்த திட்டங்கள்!
Best Pension Schemes: ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் சிறந்த பலன்களையும், முதலீடு செய்ய பல்வேறு வாய்ப்புகளையும் அளிக்கும் அரசின் சிறந்த நான்கு ஓய்வூதிய திட்டங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
Pension Schemes In India: ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலம் வரை ஒரு பணியில் பணியாற்றியதற்காக அவரின் நலனுக்கும், அவருக்கு வருவாய் அளிக்கும் வகையில் ஓய்வுக்கு பின் வழங்கப்படும் தொகை ஆகும். இது தனியார் மற்றும் அரசுகளால் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அரசால் ஊழியர்களுக்கு பல்வேறு வகையில் ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சந்தையில் பல ஓய்வூதியத் திட்டங்கள் இருந்தாலும், சில சிறந்த திட்டங்கள் அரசால் நடத்தப்படுகின்றன. அதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய நன்மையைப் பெறுவீர்கள். தேசிய ஓய்வூதிய திட்டத்துடன், குடிமக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மற்ற திட்டங்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வது ஓய்வூதியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயணப்படி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற ஓய்வூதிய பலன்களையும் வழங்குகிறது.
அடல் பென்ஷன் யோஜனா
அடல் பென்ஷன் யோஜனா அமைப்பு சாராத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 முதல் 40 வயது வரை உள்ள தகுதியான இந்திய குடிமகன் எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு, வரி செலுத்துபவராக இருக்கும் எவரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஏற்ற டூர் பேக்கேஜ்.. இரயில்வே அசத்தல்
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS)
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதியோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். இதன்படி, 60 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவைச் சேர்ந்த முதியோர்களுக்கு மாதம் ரூ.300 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த வயதிற்குப் பிறகு, அதாவது 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயது முதியோர்களுக்கு ஓய்வூதியமாக 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
எல்ஐசி ஓய்வூதியத் திட்டம்
ஆண்டு உத்தரவாத ஓய்வூதியத் திட்டமும் எல்ஐசியால் நடத்தப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு மொத்த தொகையை செலுத்திய பிறகு உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். உத்தரவாதமான வருமானத்தில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் மத்திய மானியத்தை செலுத்தும். இதில், முதலீடு தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொகையை திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு
சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய ஓய்வூதிய முறையை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் முதலில் முதலீடு செய்வது அவசியம். ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அடிப்படையிலான மற்றும் பாதுகாப்பான வருமானம் அதில் முதலீடு செய்யப்படும் தொகையில் அடையப்படுகிறது.
இது PFRDA போன்று நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் எந்த இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம். அதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமையை பாதுகாக்கிறீர்கள். இது உங்கள் முதுமையில் முக்கிய வருமான ஆதாரமாக முடியும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வழங்கிய மாஸ் அப்டேட், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ