பழைய ஓய்வூதியத் திட்டம் முக்கிய அப்டேட்: விதிகளில் மாற்றம், இந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி

Old Pension Scheme:  சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2023, 09:05 AM IST
  • உத்தராகண்ட் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த ஒரு புதிய விவரம் வெளிவந்துள்ளது.
  • ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பல்வேறு துறைகள் கணிசமாக மாற்றியுள்ளன.
  • 28 துறைகளில் உள்ள ஊழியர்களின் OPS அறிக்கைகளில் குறைபாடு இருந்தது.

Trending Photos

பழைய ஓய்வூதியத் திட்டம் முக்கிய அப்டேட்: விதிகளில் மாற்றம், இந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது. இத பற்றி இந்த பதிவில் காணலாம். 

இதற்கிடையில் உத்தராகண்ட் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த ஒரு புதிய விவரம் வெளிவந்துள்ளது.  ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பல்வேறு துறைகள் கணிசமாக மாற்றியுள்ளன. 28 துறைகளில் உள்ள ஊழியர்களின் OPS அறிக்கைகளில் குறைபாடு இருந்தது. இதனால், அரசு துறைகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2005 -க்கு முந்தைய அறிவிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன்களை வழங்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது குறிப்பிடத்தக்க இடையூறாக உள்ளது. தலைமைச் செயலக நிர்வாகம், உயர்கல்வி மற்றும் சமூக நலத்துறையின் சில பிரிவுகள் மட்டுமே நிதித்துறையிடம் இதுபோன்ற பணிகள் குறித்த விவரங்களை பலமுறை கேட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, மீதமுள்ள 28 துறைகளில் 35 பிரிவுகள் முழுமையடையாமல் உள்ளன. இதற்கிடையில், ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் உறுதி அளித்துள்ளார். இத்துறைகளின் கூடுதல் தலைமைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள், செயலர்களுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து நிதித்துறை கடுமையான கடிதம் அனுப்பியுள்ளது.

முக்கியமான விஷயங்களில் தகவல் தராமல் இருப்பது, அலட்சியம், ஒத்துழையாமை ஆகிய நடவடிக்கைகள் இருந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பட்டமாக கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் கடைசி வாய்ப்பை அளித்து, செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அனைத்து துறைகளும் இந்த விவகாரம் தொடர்பான பணியாளர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு எந்த தகவலும் ஏற்கப்படாது. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் பிரச்சினை

அக்டோபர் 2005 இல், நாட்டில் ஒரு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது முந்தைய இலாப நோக்கற்ற ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக வந்தது. இந்த உத்தரவு மாநிலத்தில் 22 அக்டோபர் 2005 அன்று வெளியிடப்பட்டது, ஆனால் அது அக்டோபர் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க | ஈஎம்ஐ கட்ட உங்களுக்கு அவகாசம் வேண்டுமா? உங்களுக்கு இருக்கும் ஈஸி வழி இதுதான்

இந்த முடிவு 2005க்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் 2005 அக்டோபருக்கு முன்னர் பணியில் சேராத நபர்களை பாதித்தது. ஏனெனில் துறை ரீதியான செயல்முறை நடந்து கொண்டிருந்ததால் இந்த ஊழியர்களின் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டது. இந்த ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பது அவர்கள் சேரும் தேதியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் கடுமை

ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பற்றிய இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து, தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பழைய ஓய்வூதிய பலன்களை வழங்குவதில் உள்ள சுமை குறித்த விவரங்களை நிதித்துறையிடம் தலைமை செயலாளர் கேட்டுள்ளார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நிதித்துறை செயலர் அனைத்து துறைகளிடமும் விவரங்களை கேட்டிருந்தார். ஆகஸ்ட் 25 அன்று, இந்த காலகட்டத்தில் அறிக்கை அளிக்காத அதிகாரிகள் அடுத்த மூன்று நாட்களில் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் நான்கைந்து துறைகளிடம்தான் முழுமையான அறிக்கை வந்துள்ளது.

கவனக்குறைவான துறைகள்

போக்குவரத்துத் துறை -01, வீட்டுவாரிய துறை -01, கால்நடை பராமரிப்புத் துறை -1,2,3, தொடக்கக் கல்வித் துறை -01, செயலக நிர்வாகத் துறை -02, வேளாண்மைத் துறை -01, சிறு நீர்ப்பாசனத் துறை, சமூக நலத்துறை -03, திட்டமிடல் துறை -01, உணவுத் துறை -01, பெண்கள் அதிகாரமளித்தல் துறை, தகவல் துறை -01, மருத்துவத் துறை -01, 02, ஆயுஷ் துறை, கலால் துறை, பணியாளர் துறை -01, தொழிலாளர் துறை, தொழில்நுட்பக் கல்வி, பஞ்சாயத்து ராஜ் துறை -01 , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில்வே தந்த செம நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News