சுக்ர மார்கி 2022: கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைகீழ் பாதையை விட  முன்னோக்கிய பாதை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஒரு கிரகத்தின் தலைகீழ் இயக்கம் வக்ர இயக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிரகம் நேரான பாதையில் ராசியை மாற்றினால், அது மார்கி என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 29, அதாவது இன்று முதல் சுக்ரன் முன்னோக்கி செல்கிறார். இந்தச் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) இது மிகவும் சாதகமாக அமையும். இன்று மதியம் 2.14 மணிக்கு தனுசு ராசியில் சுக்கிரன் பிரவேசித்தார். அவர் பிப்ரவரி 27ம் தேதி காலை 10.14 மணி வரை இந்நிலையில் இருப்பார். சுக்கிரனின் இந்த மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலனைத் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


மேஷம் (Aries): விதி ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சி பணத்தின் அடிப்படையில் நல்லதாக இருக்கும்.


ரிஷபம் (Taurus): இந்த காலத்தில் பல திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.


மிதுனம் (Gemini): பணியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மிதுன ராசிக்காரர்களுக்கு (Gemini) பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். நிதி இலக்குகளை அடைவீர்கள். 


கடகம் (Cancer): மாணவர்கள் போட்டி போட்டு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. எதிரிகளின் வஞ்சக நடவடிக்கைகள் தோல்வி அடையும். வியாபாரத்தில் நிதி வரவு இருக்கும். 


சிம்மம் (Leo): பணத்திற்காக போட்ட திட்டம் வெற்றியடையும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும்.


ALSO READ | Monthly Horoscope: பதவி உயர்வு, பண வரவு: இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பிரமாதம்!! 


கன்னி (Virgo): இந்த ராசிக்காரர்கள் சொத்து வாங்க இந்த காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தினசரி வருமானம் கூடும்.


துலாம் (Libra): இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் வேகம் மாறுவதால் பலம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுக்ர தேவரின் ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய வேலையைத் தொடங்குவது நன்மை தரும்.


விருச்சிகம் (Scorpio): சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிக லாபம் கிடைக்கும். சொத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம். இருப்பினும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


தனுசு (Sagittarius): இந்த ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்கிறது. அதனால் பொருளாதார வளம் உண்டாகும். வேலையில் ஓரளவு வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் அமையும்.


மகரம் (Capricorn): இந்த ராசிக்கு சுக்கிரனின் மாற்றம் சுபமாக கருதப்படவில்லை. இந்த காலத்தில் மகர (Capricorn) ராசிக்காரர்களுக்கு ஆடம்பரம் அதிகரிக்கும். பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். அன்றாடச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.


கும்பம் (Aquarius): சுக்கிரனின் சஞ்சாரம் இவர்களுக்கு நன்மை தரும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்ற பாதை திறக்கும். இருப்பினும், அவசர அவசரமாக நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


மீனம் (Pisces): இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் அதிகரிக்கும். வேலையில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் வழிபாடு செய்வது இந்த காலத்தில் நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி பிரச்சனை வரும், ஜாக்கிரதை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR