சனியின் ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை! 3 ராசிக்காரர்களுக்கு யோகம்!

வலிமைக் காரகர் செவ்வாயும், செல்வத்தின் காரகர் சுக்கிரனும் சனியின் வீட்டில் இணைவது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 27, 2022, 07:09 AM IST
  • வலிமைக்கு அதிபதி செவ்வாய்
  • செல்வத்துக்கு அதிபதி சுக்கிரன்
  • வலிமையும் செல்வமும் இணைந்தால் மகிழ்ச்சி! இது செவ்வாய்-சுக்கிரன் ராசிகளின் இணைவு
சனியின் ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை! 3 ராசிக்காரர்களுக்கு யோகம்! title=

ஜோதிடத்தின் படி, கிரகத்தின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனுடன், நட்சத்திரங்களின் இணைவு 12 ராசிகளையும் பாதிக்கிறது. 

தனுசு ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்துள்ளனர். இந்த இரு ராசிகளும் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் காரணிகளாக கருதப்படுகின்றன.

வீரம் மற்றும் வலிமையின் காரகர் செவ்வாய் கிரகம். சுக்கிரன்-செவ்வாய் இணைவது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், அது நல்லதாகாவே இருக்கும் அந்த ராசிகள் இவைதான்...

ALSO READ | சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம் 

மிதுனம்
சுக்கிரனும் செவ்வாயும் 7ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த இணைவானது, மகிழ்ச்சியான பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு இனிமையாக இருக்கும்.

கூட்டுத் தொழிலில்  வெற்றி உண்டாகும். பண லாபமும் உண்டு. புதிய தொழில் தொடங்க சரியான நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும்.

விருச்சிகம்
இரண்டாம் வீட்டில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்துள்ளனர். இரண்டாவது வீடு பணம். எனவே இந்த சேர்க்கையினால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும்.சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையின் போது நல்ல செய்திகள் கிடைக்கும்.

இது தவிர, வேலை-வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், சுக்கிரனும், செவ்வாயும் இணைவது விருச்சிகத்திற்கு ஆக்கப்பூர்வமான பலன்களைத் தரும்.  

ALSO READ | சனி பகவானின் ராசியில் 5 கிரகங்கள்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்?

கும்பம்
கும்ப ராசிக்கு 11ஆம் வீட்டில் சுக்கிரன்-செவ்வாய் இணைவு ஏற்படுகிறது. பதினோராம் வீடு வருமானம் தரும் என்பதால், செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தினசரி வருமானம் அதிகரிக்கும்.

ஊடகம், மருத்துவம், கலை, காவல் துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். , கும்ப ராசிக்கு அதிபதி சனி. மேலும், சனி (Lord Shani) மற்றும் சுக்கிரன் நட்பு கிரகங்கள். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் செவ்வாய் இணைப்பு நற்பலன்களைத் தரும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

Also READ | முக்கிரக சேர்க்கையால் பலனடையும் 3 ராசிகள்! நீங்கள் எந்த ராசிக்காரர்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News