Monthly Horoscope: பதவி உயர்வு, பண வரவு: இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பிரமாதம்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களையும் தரக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2022, 07:01 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • ரிஷப ராசிக்காரர்கள் புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும்.
  • தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
Monthly Horoscope: பதவி உயர்வு, பண வரவு: இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பிரமாதம்!!   title=

Monthly Horoscope (February 2022): 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் நிறைவடையவுள்ளது. அடுத்த மாதமான பிப்ரவரி மாதம் துவங்கவுள்ள நிலையில், ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களையும் தரக்கூடும்.

அந்த வகையில், இந்த மாதம் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
மேஷம் (Aries): இந்த ராசிக்காரர்கள் (Zodiac Signs) தங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக வேலையில் பதவி உயர்வை எதிர்பார்த்து அது கிடைக்காமல் இருந்தால், இந்த மாதம் உங்கள் விருப்பம் நிறைவேறும். முதலாளியுடனான உறவு மிகவும் வலுவாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரம் வணிகர்களுக்கு பல பொன்னான வாய்ப்புகளையும் கொண்டு வரும்.

ரிஷபம் (Taurus): இந்த மாதம் தொழிலுக்கு சிறந்ததாக இருக்கும். உங்கள் நிறைவேறாத ஆசை இந்த மாதம் நிறைவேறும். அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு கிடைக்கும். ரிஷப (Taurus) ராசிக்காரர்கள் புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். தொழிலதிபர்களும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பண வரவுக்கான வழிகள் திறக்கப்படும்.

ALSO READ | புத்திசாலி ராசிகள்! வெற்றிக் கொடி நாட்டும் 'இந்த’ ராசிக்காரரா நீங்கள்? 

கடகம் (Cancer): இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சில பெரிய சாதனைகளை செய்வீர்கள். செல்வம் பெருக வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.

தனுசு (Sagittarius): இந்த மாதம் உங்கள் திறமையை வெளிப்படுத்த முழு வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டப்படும். தனுசு (Sagittarius) ராசிக்காரர்கள் இந்த மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஊதிய உயர்வும் கிடைக்கும். 

ALSO READ | சனியின் ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை! 3 ராசிக்காரர்களுக்கு யோகம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News