மகாசிவராத்திரியில் கோள்களின் அற்புத சங்கமம்! சிவ பூஜை செய்யும் முகூர்த்தம்
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
மகா சிவராத்திரி நாளன்று சிவபெருமானின் வழிபாடு, இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரும். சிவன் மற்றும் அன்னை பார்வதியின் திருமணம் இன்றுதான் நடைபெற்றதாக தொன்றுதொட்டு நம்பப்படுகிறது.
அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம்.
இந்து மரபின்படி, பங்குனி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி மும்மூர்த்திகளில் முதல்வனுக்காக கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க | மகா சிவராத்திரியும், சிவனின் வடிவங்களும்
இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் முதன்முறையாக விஷ்ணுவும் பிரம்மாவும் சிவலிங்கத்தை வணங்கினர். அன்றிலிருந்து மஹாசிவராத்திரி அன்று மும்மூர்த்திகளில் முதல்வருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
மகாசிவராத்திரியில் 6 மங்களகரமான யோகங்கள்
ஜோதிடத்தின் பார்வையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இன்று இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் 6 மிகவும் மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன.
மஹாசிவராத்திரி அன்று சிவயோகத்துடன் கூடிய கிரிப்த நட்சத்திரமும் மாலை 04:32 மணி வரை உள்ளது. சந்திரன் மகர ராசியில் பிரவேசித்து அதன் பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்கும்.
மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு
மகாசிவராத்திரியில் பஞ்சகிரஹி யோகம் மகர ராசியில் உருவாகும். மகர ராசியில் செவ்வாய், சனியுடன் புதன், சுக்கிரன், சந்திரன் ஆகியோர் இருப்பார்கள். லக்னத்தில், சூரியன் மற்றும் வியாழன் கும்பத்தில் இணையும்.
மேலும், ராகு நான்காம் வீட்டில் ரிஷப ராசியிலும், கேது பத்தாம் வீட்டில் விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.
இந்த மங்களமான நேரத்தில் சிவபெருமானை வணங்கினால் சிவபெருமானின் பூரண அருளும் நற்கதியும் கிடைக்கும்.
மஹாசிவராத்திரி அன்று நள்ளிரவு 12.10 முதல் 12.57 வரை அபிஜித் முகூர்த்தம் இன்று மதியம் 02.07 முதல் 02.53 வரை விஜய் முஹூர்த்தம் இருக்கும்.
இந்த இரண்டு முஹூர்த்தங்களும் கடவுளை வழிபடுவதற்கும், எந்த ஒரு சுப காரியம் செய்வதற்கும் சிறந்தது. மாலை 05.48 முதல் 06.12 வரை அந்தி முஹூர்த்தம் வருகிறது. இந்த நேரத்தில் சிவ வழிபாடு, ஆச்சரியத்தரும் பலனைத் தரும்.
மேலும் படிக்க | சிவராத்திரி நாளில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR