Mahashivratri vs communism: கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு

கம்யூனிசத்திற்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? சீனாவில் சிவராத்திரி கொண்டாடப்படும் சுவராசியமான பின்னணி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2022, 11:10 PM IST
  • சீனாவில் சிவ வழிபாடு
  • 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சீனாவில் சிவனை வழிபட்டனர்
  • சீனாவில் இந்து மதத்தின் செல்வாக்கு
Mahashivratri vs communism: கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு title=

சிவபெருமானின் பல கோவில்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளில் அமைந்துள்ளன. சிவபெருமான், நாட்டிலும் உலகிலும் வெவ்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். இந்தியாவின் அண்டை நாடான சீனாவிலும், சிவபெருமான் வழிபடப்படுகிறார்.

உண்மையில், இன்றைய சீனாவில் ஒரு சிறு பகுதியினர் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக இந்து மதத்தின் யோகா மற்றும் ஆன்மீகத்தின் தன்மை அவர்களால் பின்பற்றப்படுகிறது. 

நவீன சீனாவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், வரலாற்றுச் சான்றுகளின்படி, இடைக்கால சீனாவில் இந்து மதம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது.

DEVOTIONAL

இந்து மதத்தின் புனிதமான மதப் பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பரவலான நம்பிக்கையின்படி, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் சிவராத்திரி நன்னாளன்றுதான் திருமணம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பால்குன் மாதத்தின் தேய்பிறை சதுர்தசி அன்று, மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இந்து மதத்தில் சிவபெருமானின் வீடு கைலாச மலை என்று கூறப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானின் பக்தர்கள் மானசரோவருக்கு கடினமான பயணத்தை மேற்கொள்கின்றனர். சீனாவில் பௌத்தம் மற்றும் இந்து மதத்தின் கலவையான வடிவம் பிரபலமானது.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்

இந்து மதத்தின் செல்வாக்கு தமிழ் வணிகர்கள் மூலம் இடைக்கால சீனாவை அடைந்ததாக கூறப்படுகிறது. தமிழ் வணிகர்களின் செல்வாக்கு இன்றைய தென்கிழக்கு சீனாவில் அதிகமாக இருந்தது. இன்றும் தமிழ்நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்தோரில் கணிசமான எண்ணிக்கையினர் ஹாங்காங்கில் வாழ்கின்றனர்.

இந்த நகரத்தில் சிவபெருமான் உட்பட பிற இந்து தெய்வங்களின் கோவில்கள் உள்ளன. சீனாவின் புஜியான் மாகாணத்தின் குவாங்ஜு நகரில் உள்ள சிவன் கோவில்களில் சான்றுகள் கிடைத்துள்ளன. 

குறிப்பாக Quanzhou வின் Kaiyuan கோவில் மிகவும் பிரபலமானது. சீனாவில் இந்து மதத்தின் சான்றுகள் காணப்படும் சில கோயில்களில் கையுவான் கோயிலும் ஒன்று. இந்த கோவிலில் கௌதம புத்தருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது என்றாலும், பல இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளும் இந்த ஆலயத்தில் உள்ளன.

 சோழப் பேரரசர் ராஜராஜன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு வணிகத்திற்காக ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். தொல்லியல் ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரனின் கூற்றுப்படி, தமிழகம் மற்றும் சீனாவின் நில உறவுகள் வரலாற்று சிறப்புமிக்கவை.

மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் கிரகங்களின் அற்புத சேர்க்கை: இந்த ராசிகளுக்கு அமோக நன்மை

14 ஆம் நூற்றாண்டில் சிவன் கோவில் இருந்ததற்கான சான்று
ராமச்சந்திரனின் கூற்றுப்படி, சீனாவில் 14 ஆம் நூற்றாண்டில் சிவன் கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 

இந்தக் கோயிலுக்கு கானீஸ்வம் என்று பெயர். தவ சக்ரவர்த்தி என்பவரால்என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. சீனாவில் சமண பௌத்தத்தை பரப்பிய போதி தர்மர் காஞ்சிபுரத்தில் இருந்து சென்றதாக நம்பப்படுகிறது.

சிவன் மகேஸ்வரர் வடிவில் வணங்கப்படுகிறார்
பௌத்தம் மற்றும் இந்து மதத்தின் கலப்பு கலாச்சாரத்தின் படி, சீனாவில் பௌத்த பின்பற்றுபவர்களிடையே சிவபெருமான் மகேஷ்வர் என்று அழைக்கப்படுகிறார். அவர் மூன்று உலகங்களுக்கும் அதிபதியாகக் கருதப்படுகிறார். 

பாலி இலக்கியத்தில் சப்லோகதிபதி என்று சிவபெருமான் அழைக்கப்படுகிறார். புத்த மதத்தின் கலாச்சாரத்தின் படி, சிவபெருமான் மக்களுக்கு உதவும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News