iPhone பயனர்கள் கவனத்திற்கு.. தொலைபேசியை `Unlock` செய்வது குறித்து புதிய Update!
ஐபோன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி... தொலைபேசியை `Unlock` செய்வது பற்றிய ஒரு பெரிய புதுப்பிப்பை ஆப்பிள் கொண்டு வந்தது!
ஐபோன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி... தொலைபேசியை 'Unlock' செய்வது பற்றிய ஒரு பெரிய புதுப்பிப்பை ஆப்பிள் கொண்டு வந்தது!
கொரோனா வைரஸ் (coronavirus) தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் முகமூடிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், iPhone-யை திறக்க Face ID-யை பயன்படுத்தும் மக்களுக்கு இது முகவும் இக்கட்டான காரியங்களில் ஒன்று. இந்த சிக்கலில் இருந்து விடுபட ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இப்போது உங்கள் கைபேசியைத் Unlock செய்ய உங்கள் முகமூடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை. இது தவிர, iPhone-யை திறக்க கடவுக்குறியீடு (Passcode) தேவையில்லை. Apple இப்போது ஒரு சிறந்த அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய புதுப்பிப்பை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இப்போது தொலைபேசியை Apple வாட்ச் மூலம் திறக்கலாம்
ஆப்பிள் புதிய iOS 14.5 Update-யை வெளியிட்டுள்ளது. இந்த புதிய புதுப்பிப்பு மூலம், இப்போது எந்த iphone பயனரும் ஆப்பிள் வாட்சின் உதவியுடன் தொலைபேசியைத் திறக்க முடியும். இந்த புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு தொலைபேசியைத் திறக்க Face ID மற்றும் Biometric தேவையில்லை என்று தொழில்நுட்ப தளமான தெவர்ஜ் கூறுகிறது. முகமூடியைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தொலைபேசியைத் திறக்கலாம்.
ALSO READ | டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
பெறப்பட்ட தகவல்களின்படி, பயனர் iphone அவரை நெருங்கியவுடன் தொலைபேசி தானாக திறக்கப்படும். இதைப் பயன்படுத்த, உங்கள் iPhone மற்றும் Apple Watch மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். இரண்டு சாதனங்களும் தொலைவில் இருக்கும்போது தொலைபேசியைத் திறக்க முடியாது. தொலைபேசி திறக்கப்பட்டிருந்தாலும் App Store மற்றும் iTune இருந்து வாங்குவதற்கு கடவுச்சொல் தேவைப்படும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இறுதி வாங்குவதற்கு முன் கடவுக்குறியீடு தேவைப்படும்.
இந்த தொழில்நுட்பம் புதியதல்ல
அறிக்கையின்படி, Apple Watch-ல் இருந்து iPhone-யை திறக்கும் தொழில்நுட்பம் புதியதல்ல. Apple Watch-யின் உதவியுடன் Mac திறக்கப்படலாம். இந்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் முகமூடிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, iPhone-யை திறக்க Face ID பயன்படுத்தப்படவில்லை. இந்த சிக்கலில் இருந்து விடுபட ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் Macbook மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படவில்லை என்றாலும்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR