மிஸ் பண்ணிடாதீங்க! ஆப்பிள் மேக்புக்கை வாங்க சிறந்த நேரம் இதுதான் !
இ-காமர்ஸ் தளத்தில் வெறும் 61,890 ரூபாய்க்கு ஆப்பிள் மேக்புக்கை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
ஆப்பிள் மேக்புக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் அதிக தள்ளுபடியில் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1ஐ வழங்குகிறது, மேலும் இதனை இ-காமர்ஸ் தளத்தில் வெறும் 61,890 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த தள்ளுபடி சலுகைகளில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி கார்டுகளில் கேஷ்பேக் போன்றவை வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | விலையை குறைக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார்! ஆக்டிவேட் செய்வது எப்படி?
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் ஆனது ரூ.92,900க்கு ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.8000 தள்ளுபடியுடன் ரூ.84,990க்கு ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடி சலுகைகளை பெற விரும்புபவர்கள் பழைய லேப்டாப்புகளை கொடுத்து மாற்றி கொள்வதன் மூலம் ரூ.23,100 வரை தள்ளுபடியை பெறலாம். இருப்பினும் மாற்றப்படும் லேப்டாப்பின் தன்மையை பொறுத்து தள்ளுபடி செய்யப்படும் விலையின் அளவு மாறுபடும். ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ப்ளிப்கார்ட் 5% ஆலிமிடெட் கேஷ்பேக்கை வழங்குகிறது.
ஆப்பிள் மேக்புக் எம்1 சிப் லேப்டாப் 8-கோர் சிபியு மற்றும் 7-கோர் சிபியு ஆகியவற்றை வழங்குகிறது. இது 1560×1600 பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் 227PPI பிக்சல் டென்சிடியுடன், 13.3-இன்ச் எல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இதில் 30W யுஎஸ்பி-சி பவர் உள்ளது. இதன் கீபோர்ட் ஆனது டச் ஐடி மற்றும் ஃபோர்ஸ் டச் டிராக் பேடுடன் அமைந்துள்ளது. 2022-ல் எம்2 ப்ராசஸருடன் கூடிய மேக்புக் ஏர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேக்புக் ஏர் எம்1-ன் விலையானது மேக்புக் ஏர் எம்2 அறிமுகத்திற்கு பிறகு மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Flipkart Sale: 55,000 ரூபாய் 43 Inch Samsung டிவியை 17,000 ரூபாய்க்கு வாங்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR