Flipkart Sale: 55,000 ரூபாய் 43 Inch Samsung டிவியை 17,000 ரூபாய்க்கு வாங்கலாம்!

இன்று பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனையின் கடைசி நாள். இந்த விற்பனையின் மூலம் சாம்சங்கின்  ரூ.54,999 மதிப்பிலான 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.16,999க்கு வாங்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2022, 11:58 AM IST
  • பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனை.
  • 55 ஆயிரம் சாம்சங் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்.
  • இன்று விற்பனையின் கடைசி நாள்.
Flipkart Sale: 55,000 ரூபாய் 43 Inch Samsung டிவியை 17,000 ரூபாய்க்கு வாங்கலாம்! title=

இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் பிக் பச்சத் தமால் விற்பனை மார்ச் 4 முதல் நடைபெறுகிறது. இதில் ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்று இந்த விற்பனையில் வழங்கப்படும் ஸ்மார்ட் டிவி சலுகை விற்பனையில், சாம்சங்கின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.54,900க்கு பதிலாக வெறும் ரூ.16,999க்கு  வாங்க முடியும். 

சாம்சங்கின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி

Samsung Crystal 4K Pro 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV சந்தை விலை 54,900 ரூபாய். ஆனால்,  Flipkart Big Bachat Dhamal Sale என்னும் சலுகை விற்பனையில், 28% தள்ளுபடிக்கு பிறகு 38,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எந்தவொரு வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டையும் நீங்கள் பணம் செலுத்த பயன்படுத்தினால், சிறப்பு ப்ரீபெய்ட் சலுகையின் கீழ் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதற்குப் பிறகு, இந்த டிவியின் விலை உங்களுக்கு ரூ.37,999 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | Honda கார்களில் மார்ச் மாத பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள் 

எக்ஸ்சேஞ்ச் ஆபர் 

இந்த ஒப்பந்தத்தில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது, இதில் உங்கள் பழைய டிவிக்கு பதிலாக Samsung Crystal 4K Pro 108 cm (43 inch) Ultra HD (4K) LED ஸ்மார்ட் டிவியை வாங்குவதன் மூலம் ரூ.16,000 வரை சேமிக்க முடியும். மேலும், குறிப்பிட்ட மாடல்களை எக்ஸ்சேஞ்சாக கொடுத்தால், கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​நீங்கள் மேலும் ரூ.21 ஆயிரத்தை மிச்சப்படுத்தலாம், இதன் மூலம் ரூ.16,999க்கு இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.

சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்

Samsung Crystal 4K Pro 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV ஆனது 43-inch Ultra HD LED டிஸ்ப்ளே, 3.840 x 2,160 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. Tizen ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது 20W ஒலி வெளியீட்டுடன் வருகிறது மேலும் இந்த டிவி Netflix, Disney + Hotstar மற்றும் YouTube போன்ற அனைத்து ஆப்ஸையும் ஆதரிக்கிறது.

பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனை

விற்பனையின் கடைசி நாள் இன்று,  பல அற்புதமான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 

மேலும் படிக்க | Maruti Suzuki சூப்பர் நியூஸ்: இனி இவற்றை ஆன்லைனிலேயே வாங்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News