Astro: பிரச்சனைகளை திறமையாக கையாளும் 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில், 3 ராசிகளுக்கு சொந்தக்காரர்கள் பிரச்சனைகளை திறமையாக கையாளும் திறன் பெற்றவர்கள் என்பதோடு அவர்களை எளிதில் தோற்கடிக்கவும் முடியாது.
Personality by Zodiac Sign: ஜோதிடத்தில் எளிதில் தோற்கடிக்க முடியாத சில ராசிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளை வென்று ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வெற்றிகள் அவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கும் என்பது தான்.
மேலும் அவர்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் மிகவும் சாதுரியமாக தீர்க்கும் திறன் பெற்றவர்கள், அவர்கள் தோல்வியடையும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மக்கள் அவரைத் தங்கள் தலைவனாக எளிதாகக் கருதுவதற்கு இதுவே காரணம். ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் இயல்பைக் காணலாம். அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. அவர்கள் பிடிவாதமாகவும் தீவிர எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை நிறைவேற்றினால் தான் நிம்மதி அடைவார்கள். வாழ்க்கையில் அனைவருடம் நேர்மையாக இருப்பார்கள், அதனால், அவர்கள் மிகவும் பயமற்றவர்கள் மற்றும் தைரியமானவர்கள். எனவே எதிரிகளின் பாதி தைரியம் அவர்களின் நம்பிக்கையைப் பார்த்த பிறகு காணாமல் போய்விடுகிறது.
சிம்மம்: இவர்களது ராசியின் பெயருக்கு ஏற்ப காட்டில் சிங்கம் போல் மிகவும் பயம் ஏதும் இல்லாமல், தைரியம், தன்னம்பிக்கை உள்ளவர்கள். இவர்கள் பேசுவதில் வல்லவர்கள். பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவர்கள். அவர்கள் எதிராளியை சமாளிக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள். எனவே இந்த நபர்களுடன் வீண் வம்பிற்கு போகாமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க | Personality by Zodiac Sign: வெறுப்பு, பகை குணம் இல்லாத '3' ராசிக்காரர்கள்..!!
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் ஆயிரம் விஷயம் பொதிந்திருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் வெளிப்படையாக சண்டையிட மாட்டார்கள். ஆனால் பொதுவாக பின்னால் இருந்து தான் தாக்குவார்கள். மக்களின் எண்ணங்களை உணரும் திறன் கொண்டவர்கள். எனவே எவரையும் எளிதில் அடக்கிவிடுவார்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள் என்பதை எப்போதும் நிரூபிக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR