துர் சொப்பனங்கள் அல்லது கெட்ட கனவுகள் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, மேலும் அவை பல வகையான அறிகுறிகளையும் தருகின்றன. எனவே கனவுகளை புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில், இதே போன்ற கெட்ட கனவுகள் அல்லது தொடர்ந்து வரும் பயங்கரமான கனவுகள் பல வகையான மாயைகளையும், மன பாதிப்புகளையும் உருவாக்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பகலில் கண்விழித்தாலும் இரவு உறக்கத்தில் கண்ட கனவுகள் நமது நினைவுக்கு வந்து துரத்துவதால், பல சமயங்களில் நிலை மோசமாகி விடுகிறது. இதுபோன்ற பயங்கரமான கனவுகளில் இருந்து விடுபட, அக்னி புராணத்தில் சில எளிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்தால், உங்களை வாட்டும் பயங்கரமான கனவுகளில் இருந்து நீங்கள் எளிதாக விடுபடலாம்.


ALSO READ | Name Astrology: இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்ணிற்கு தொழில் வெற்றி உறுதி


கனவில் பாம்புகள்  வந்து உங்களை மீண்டும் மீண்டும் பயமுறுத்தினால், சிவன் கோவிலில் வழிபட்ட பிறகு வெள்ளியினால் ஆன பாம்பு (Snakes) வடிவத்தை தானம் செய்யுங்கள். கனவில் பாம்பு தோன்றுவது நின்று விடும்.


கனவுகள் மட்டுமல்ல, பல பிரச்சனைகளிலிருந்தும் விடுபட மகாமருத்யுஞ்சய மந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு மீண்டும் மீண்டும் பயங்கரமான கனவுகள் இருந்தால், சில நாட்களுக்கு மகாமருத்யுஞ்சய மந்திரம் படியுங்கள். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.


தினமும் மாலையில் துளசி செடியின் கீழ் தீபம் ஏற்றவும். இதுவும் உங்கள் மனதை அமைதியாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்கும். இது கனவுகளை நிறுத்தும்.


ALSO READ | மரணத்திற்குப் பிறகு கைரேகை மாறுமா.. அறிவியல் கூறுவது என்ன..!!


நீங்கள் கெட்ட கனவு அல்லது அசுபமான கனவை கண்டால், அதிகாலையில் குளித்து, பிராமணருக்கு உணவு அல்லது ஆடை தானம் செய்யுங்கள். கோவிலுக்குச் சென்று உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும் தீர்வு கிடைக்கும்.
 
காலையில் சூரியனுக்கு (The Sun)  நீரை அர்ப்பணம் செய்யவும். இதன் காரணமாக நம மனதி நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். இதனுடன்,  கெட்ட கனவுகள் வருவது நின்று விடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | புத-ஆதித்ய யோகம்: இந்த ‘3’ ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR