Astrology: ஜோதிடத்தின் அடிப்படையில் சில நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிக உகந்ததாக கருதப்படுகின்றது. அன்று அவர்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற கிழமை என்பதை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக செவ்வாய்கிழமைகளில் நேர்மையான முறையில் கண கச்சிதமாக பல வேலைகளை செய்து முடித்து நற்பெயரை பெறுவார்கள். எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். பண விஷயத்தில் பேராசையை தவிர்க்க முயற்சி செய்தால், நினைத்ததை விட அதிக பண வரவு கிடைக்கும்.


கடகம்: கடக (Cancer) ராசிக்காரகள் எதிர்காலத்திற்கான முதலீட்டு விஷயங்களை செவ்வாய்க்கிழமைகளில் திட்டமிடலாம். பணியிடத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள். எதிரிகள் உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம். எனினும், அதை எதிர்த்து வெற்றி காண்பீர்கள்.


சிம்மம்: செவ்வாய்கிழமைகளில் எடுக்கும் முடிவு சிம்ம (Leo) ராசிக்காரகளுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை சிம்ம (Leo) ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் எடுப்பது உசிதம். பால் வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த நாளில், நீங்கள் பழைய முதலீட்டின் லாபத்தை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் அன்பு மேலோங்கி இருக்கும்.


ALSO READ: Astrology: இந்த 5 ராசிக்காரர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்!!


தனுசு: செவ்வாய்கிழமை உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தொழிலதிபர்கள் சிலருடன் தேவையான சந்திப்புகளை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் வியாபாரம் மற்றும் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டின் பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும். பொதுவாக செவாய்க்கிழமை தனுசு ராசிக்காரகளுக்கு வெற்றியைத் 
 தேடித்தரும் ஒரு நாளாக இருக்கும்.


மீனம்: நீண்ட நாட்களாக திட்டமிட்ட காரியங்களை முடிக்க, மீன (Pisces) ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உகந்த நாளாக இருக்கும். இந்த நாளில் உங்கள் வருமானம் சராசரியை விட சிறப்பாக இருக்கும். உறவினர்களின் பேராதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் செல்வத்தை அளிக்கும் நாளாக கருதப்படுகின்றது.


ALSO READ: குரு பெயர்ச்சி; இந்த 4 ராசிக்காரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR