ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி செய்தி வந்துள்ள்ளது. உண்மையில், சமீபத்தில் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் குழுவில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பது சிறப்பு. குடியேற்றத்தை கட்டுப்படுத்தவே ஆஸ்திரேலிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசா கட்டண உயர்வு இன்று முதல் அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் ஆஸ்திரேலியா நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  புதிய முறையின் கீழ், மாணவர்கள் இப்போது 1600 ஆஸ்திரேலிய டாலர்களை செலுத்த வேண்டும். முன்பனதாக விசா கட்டணம் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.40,000 ஆக இருந்த விசா கட்டணம் ரூ.89,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தற்காலிக பட்டதாரி விசா மற்றும் கடல்சார் குழு விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் போது மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. இது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மாணவர்களையும் பாதிக்கும்.


ஆஸ்திரேலியாவிற்கு மாணவர் விசா மூலம், வேறு சிலரும் அதிக அளவில் வருவதாக அரசுக்கு புகார் வந்ததை அடுத்து மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!


ஆஸ்திரேலிய உள்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளாரி ஓ'நீல் கூறுகையில், ‘இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் நமது சர்வதேச கல்வி முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவும், நியாயமான, குறுகிய மற்றும் வரம்புகளுடன் கூடிய இடம்பெயர்வு முறையை உருவாக்க உதவும். ஆஸ்திரேலியாவுக்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய முடிவு’ என்றார்.


படிக்கும் நோக்கில் வரும் மாணவர்கள் மட்டுமே விசா பெற்று நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1.22 லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ