இந்தியர்கள் வேலை, கல்வி, சுற்றுலா என பல வித காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஷெங்கன் என்று அழைக்கப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகச் செல்ல உதவும் மல்டிபிள் என்ட்ரி அனுமதியுடன் கூடிய ஷெங்கன் விசாவிற்கு இந்தியர்கள் (Schengen Visa For Indians) விண்ணப்பிக்கலாம் என சென்ற மாதம் ஐரோப்பா கூறியது. புதிய விதிகளின்படி, இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் நீண்ட கால, பல நுழைவு ஷெங்கன் விசாக்களை பெறலாம்.
ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம். ஷெங்கன் பகுதி ஷெங்கன் எனப்படும் 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்டுள்ளது. இங்கு செல்ல, உங்களுக்கு ஏதேனும் ஒரு நாட்டின் ஷெங்கன் விசா வேண்டும், விசா கிடைத்தால், அங்கு சென்ற பிறகு, ஷெங்கன் பகுதியின் வேறு எந்த நாட்டிற்கும் தடையின்றி செல்லலாம்.
பல ஷெங்கன் நாடுகளுக்கு விசா பெறுவது மிகவும் கடினம். பலரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மால்டா, எஸ்டோனியா, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு விசா கிடைப்பது கடினம். அதே நேரத்தில், ஐரோப்பாவில் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, லாட்வியா மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகளின் விசா எளிதாகக் கிடைக்கிறது. எனவே எளிதாக விசா கிடைக்கும் நாடுகளை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல சிறந்த பருவம் கோடைக்காலம் ஆகும், ஏனெனில் கோடையில் கூட வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஐரோப்பாவில் கோடை காலம் ஆகஸ்ட் வரை மற்றும் சில சமயங்களில் அக்டோபர் வரை இருக்கும், எனவே இந்த மாதங்களில் நீங்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல திட்டமிடலாம்.
ஐரோப்பிய நாடுகளுக்கு, குறைந்த விசா நிராகரிப்பு விகிதம் உள்ள ஷெங்கன் நாடுகளில் இருந்து விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த நாட்டிற்கான விசா கிடைத்தவுடன், நீங்கள் அனைத்து ஷெங்கன் நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். இருப்பினும், நீங்கள் முதலில் செல்ல வேண்டியது விசா பெற்ற நாட்டிற்கு, அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும்.
மேலும் படிக்க | பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்..!!
விசா விண்ணப்பத்திற்கு குறைந்த நிராகரிப்பு விகிதங்களைக் கொண்ட ஷெங்கன் நாடுகள் விபரம்
ஐஸ்லாந்து - 2.2% நிராகரிப்பு விகிதம்
சுவிட்சர்லாந்து - 10.7%
லாட்வியா - 11.7%
இத்தாலி - 12%
லக்சம்பர்க் - 12.7%
லிதுவேனியா - 12.8%
ஸ்லோவாக்கியா - 12.9%
ஜெர்மனி - 14.3%
ஆஸ்திரியா - 14.3%
கிரீஸ் - 14.7%
ஷெங்கன் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பு நாடுகளுடன் 29 ஐரோப்பிய நாடுகளை கொண்டுள்ளது. அதாவது ஒரே ஒரு விசா மூலம் ஷெங்கன் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்குச் செல்ல முடியும். ஷெங்கன் பகுதியில் பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, எஸ்டோனியா, கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், ஹங்கேரி, மால்டா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ