புதுடெல்லி: UPI Payment Failure: ஏப்ரல் 1, 2021 அன்று, புதிய நிதியாண்டு தொடங்கியது. அன்று நாட்டின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படவில்லை. அன்று, சில வங்கிகளின் UPI மற்றும் IMPS பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தன. அந்த சூழலில் வாடிக்கையாளர்களின் பணமும் சிக்கிக்கொண்டது. உங்கள் UPI பரிவர்த்தனை தோல்வியுற்று, சரியான நேரத்தில் வங்கி உங்கள் கணக்கில் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 1, 2021 அன்று UPI செயல்முறைகள் தோல்வியடைந்தன


ஏப்ரல் 1 ம் தேதி மாலைக்குள் பெரும்பாலான வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. மாலைக்குள் வாடிக்கையாளர்கள் தடையின்றி IMPS மற்றும் UPI சேவைகளைப் பெற முடிந்தது. ஆனால் தங்களது பரிவர்த்தனை தோல்வியடைந்த பிறகு, தங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்று பல வாடிக்கையாளர்கள் புகார் கூறினர்.



ALSO READ: ஆதார் பான் இணைப்பை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம்: வழிகள் இதோ


இவைதான் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்


பரிவர்த்தனை தோல்வியுற்று பணம் பெற முடியாதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அக்டோபர் 2019 க்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் பிரச்சினையை தீர்க்கும். இந்த சுற்றறிக்கையின் கீழ், பணத்தை தானாக மாற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லைக்குள் பரிவர்த்தனைக்கான தீர்வு அளிக்கப்படாவிட்டால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும். சுற்றறிக்கையின் படி, காலக்கெடு முடிந்ததும், ஒரு நாளைக்கு ரூ .100 என்ற விகிதத்தில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.


சுற்றறிக்கையின் படி, UPI பரிவர்த்தனை தோல்வியுற்று, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, அந்த பணம் பயனாளியின் கணக்கை சென்றடையவில்லை என்றால், பரிவர்த்தனை செய்யப்பட்ட நாளிலிருந்து T + 1 நாளுக்குள் ஆட்டோ ரிவர்சல் செய்யப்பட வெண்டும். இங்கே T என்பது பரிவர்த்தனை நாள் என்றும் +1 என்றால் ஒரு நாள் அல்லது 24 மணிநேரம் என்றும் பொருள்.


இங்கே புகார் செய்யலாம்


முதலில், நீங்கள் சேவை வழங்குநரிடம் புகார் செய்ய வேண்டும். நீங்கள் Raise Dispute -ல் சென்று இதை செய்யலாம். இங்கே உங்கள் புகாரை தாக்கல் செய்யலாம். உங்கள் புகார் நியாயமானதாக இருந்தால், உங்கள் பணம்  உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடும். புகார் அளித்தும் வங்கியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், நீங்கள் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2019 ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.


ALSO READ: இந்தியாவில் launch ஆனது Poco X3: அசத்தும் அம்சங்கள், நம்ப முடியாத விலை, விவரம் இதோ!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR