அசின் போல பளபளப்பான சருமம் வேண்டுமா..? அவரே கூறும் டிப்ஸ் இதோ..!
பிரபல நடிகை அசின், அவரது சருமத்தை எப்படி பராமரிக்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு..? இந்த டிப்ஸை படித்து பயன்பெறுங்கள்.
தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், அசின். 2016ஆம் ஆண்டு மைக்ராேமேக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயலாளரை திருமணம் செய்த பிறகு மொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார். அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. அசின், திரையுலகை ஆட்சி செய்து வந்த காலத்தின் போது தனது சருமத்தின் அழகு குறித்தும், அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்தும் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சரும பராமரிப்பு..
அசின், திரையுலகில் நடித்துக்கொண்டிருந்த சமயங்களில் தனது சருமத்தை பரமரிப்பதிலும் பாதுகாப்பாதிலும் அதீது கவனம் செலுத்துவாராம். தங்கள் சரும அழகை கெடாமல் பார்த்துக்கொள்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுருத்துகிறார். அதற்கு முக்கியமாக, நல்ல டயட் இருக்க வேண்டும் என்றும் சருமத்திற்கு உகந்த புரதத்தை எடுத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்து, வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.
மேலும் படிக்க | சிம்புவை போல நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..!
வெளியில் செல்லும் போது சருமத்தை எப்படி பாதுகாப்பது..?
நாம், வீட்டில் இருக்கும் போதோ அல்லது வீட்டில் இருந்து அலுவலகம், பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு செல்லும் போதோ சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், வெளியூர் பயணங்கள் அல்லது நெடுந்தூர பயணங்களின் போது சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது? அதற்கும் டிப்ஸ் சொல்கிறார் அசின். அவர் ஷூட்டிங்கிற்காக வெளியில் செல்லும் போது எப்போது சன்ஸ்க்ரீன் எடுத்துக்கொள்வாராம். சருமம் வறட்சி அடையாமல் பாரத்துக்கொள்ள எப்போதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பாராம். அவரது சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசரை உபயோகிப்பாராம். வெயிலில் செல்லும் போது குடை பிடித்துக்கொண்டு செல்வாராம். விழாக்கள் அல்லது நடிக்கும் போது போட்டுக்கொள்ளும் மேக்-அப்களை அந்த வேலை முடிந்தவுடன் நீக்கிவிடுவாராம். தூங்க போவதற்கு முன்பு கண்டிப்பாக மேக்-அப்பை துடைத்து விட்டு செல்ல வேண்டும் என்கிறார் அசின்.
முடி பராமரிப்பு..
வேலை இல்லாத சமயங்களில், அசின் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வாராம். குறிப்பாக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் எண்ணெயைதான் உபயோகிப்பாராம். தன் முடிக்கு ஏற்ற ஷாம்பூவை தேய்த்து தலைக்கு குளிப்பாராம். மிகவும் சிக்காக இருக்கும் முடியை சரிசெய்ய சீரம் அல்லது நல்ல கண்டிஷனர் உபயோகிப்பேன் என்கிறார் அசின்.
வெயிலில் போவதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும்..?
வெயிலால் சருமத்திற்கு பல பாதிப்புகள் வருவதுண்டு. வெயிலால் சருமம் சுருங்குவது, அல்லது வறண்டு போவது போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். இதை தவிர்க்க சில டிப்ஸ் சொல்கிறார் அசின். வெயிலில் போவதற்கு முன்னர் சன்ஸ்கீர்ன் போட்டு இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமாம். சருமத்தில் வெயில் படாமல் பாதுகாக்க க்ளவுஸ், மாஸ்க் மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்தலாம். மதிய நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும் என்கிறார் அசின்.
சருமம் மற்றும் முடிக்கு ஏற்ற பழங்கள்/காய்கறிகள்:
சிகை அழகையும் சரும அழகையும் பாதுகாக்க அழகு சாதன பொருட்கள் மட்டும் அரணாக அமையாது. இவற்றை நன்றாக வைத்துக்கொள்ள ஒரு சில பழ வகைகள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பச்சை காய்கறிகள் மற்றும் இலை சார்ந்த பழ வகைகள் மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அசின். மேலும், பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலும் முடியும் வலுபெறும் என்கிறார்.
சுருக்கம் வராமல் தடுப்பது எப்படி..?
வயதானவர்கள் சிலருக்கு கூட சுருக்கம் இல்லாமல் இருப்பதை நாம் பார்ப்பதுண்டு அதற்கு அவர்கள் ஹெல்தியாக சாப்பிடுவதும் ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். சுருக்கம் வராமல் தடுக்க அசினும் சில டிப்ஸ் சொல்கிறார். சருமைத்தை நன்கு பராமரித்து, அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார். இதனால், நம் உடலின் முகம் உள்பட அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கம் வராது என்கிறார். வெயிலில் அதிகம் முகத்தை காட்டாமல் அதிக கெமிக்கல் கலக்காத அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்கிறார் அசின்.
மேலும் படிக்க | Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ