புதுடெல்லி: Gozero Mobility வியாழக்கிழமை மற்றொரு மலிவு விலை மின்சார சைக்கிளான ஸ்கெல்லிங் லைட்டை (Skellig Lite) அறிமுகப்படுத்தியது. ஸ்கெல்லிங் தொடர் சைக்கிள்கள் GoZero வலைத்தளம் மற்றும் பல ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனையில் உள்ளன. ரூ. 2999 அட்வான்ஸ் தொகையை அளித்து ஸ்கெல்லிங் லைட்டை முன்பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மின்சார சைக்கிளின் (Electric Cycle) விலை ரூ .19,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் இயக்க பொருத்தமான வகையில் ஸ்கெல்லிக் லைட் சைக்கிள்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 25 கி.மீ ஆகும். இதன் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்துக்கு 25 கி.மீ ஆகும்.


பிரிக்கக்கூடிய EnerDrive 210 Wh லித்தியம் பேட்டரி பேக் மற்றும் 250 W பின்புற ஹப்-டிரைவ் மோட்டார் மூலம் இந்த பைக் இயக்கப்படுகிறது. மேலும் இது GoZero Drive கன்ட்ரோல் 2.0 எல்இடி டிஸ்ப்ளே யூனிட்டால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ரைடர் மூன்று பெடல் அசிஸ்ட் முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்.


இதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய 2.5 மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஸ்கெல்லிங் லைட்டில் ஒரு அலாய் ஸ்டெம் ஹேண்டில், 26x1.95 டயர்கள், சிறப்பு வி-பிரேக்குகள் மற்றும் ஒரு உறுதியான பிரெண்ட் ஃபோர்க் ஆகியவை உள்ளன.


ALSO READ: Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்


"தொற்றுநோய் (Corona Pandemic) மற்றும் இரண்டாவது அலை தொடங்கியவுடன், மக்கள் கோவிட் கட்டுப்பாடுகளையும் தங்கள் ஆரோக்கியத்தையும் முன்பை விட மிகவும் தீவிரமாக கருதத் தொடங்கியுள்ளனர். கோவிட் குறித்த அபாயங்களிலிருந்து காத்துக்கொள்ளவும், உடலுக்கு நல்ல பயிற்சியை வழங்கவும் மின்சார சைக்கிள்கள் ஒரு நல்ல தேர்வாக உள்ளன. இதன் விலையும் மிகவும் அதிகமாக இல்லாமல் அனைவரும் வாங்கக்கூடிய முறையில் உள்ளது.”


“ஸ்கெல்லிங் லைட்டின் ஆரம்ப விலை, இதை அனைவரும் வாங்கும் வரம்பிற்குள் வைத்துள்ளது. இதை வாங்குபவர்கள் எளிதாக இதை தங்கள் வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைத்துக்கொள்ள முடியும். ஸ்கெல்லிங், ஸ்கெல்லிங் லைட் மற்றும் ஸ்கெல்லிங் புரோ ஆகிய மூன்று ஸ்கெல்லிங் வகைகளும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாதா மாதம் விற்பனை அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஒவ்வொரு வகையும் அவற்றின் பிரிவில் நல்ல விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியையும் பெற்று வருகின்றன” என்று கோஜீரோ (GoZero) தலைமை நிர்வாக அதிகாரி அங்கித் குமார் கூறினார்.


ALSO READ: Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR