இந்தியாவின் Best Electric Cycles: முழு சார்ஜில் 100 கி.மீ., இன்னும் பல வசதிகள்!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். அதிலும், மின்சார மிதிவண்டிகள் இந்நாட்களில் மக்கள் அதிகம் நாடும் ஒரு மாற்றாக உள்ளன. அது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதோடு நல்ல ரேஞ்சையும் அளிக்கிறது.   

Written by - ZEE Bureau | Last Updated : May 25, 2021, 06:01 PM IST
  • மின்சார மிதிவண்டிகள் இந்நாட்களில் மக்கள் அதிகம் நாடும் ஒரு மாற்றாக உள்ளன.
  • இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் மின்சார மிதிவண்டிகளை விற்பனை செய்கின்றன.
  • Toutche நிறுவனம் Heileo M100 என்ற சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் Best Electric Cycles: முழு சார்ஜில் 100 கி.மீ., இன்னும் பல வசதிகள்!!

புதுடெல்லி: Electric Cycles In India: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். அதிலும், மின்சார மிதிவண்டிகள் இந்நாட்களில் மக்கள் அதிகம் நாடும் ஒரு மாற்றாக உள்ளன. அது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதோடு நல்ல ரேஞ்சையும் அளிக்கிறது. 

உங்கள் பாக்கெட்டையும் ஆரோக்கியத்தையும் சேர்ந்து பாதுகாக்கவல்ல சில நல்ல மின்சார சைக்கிள்கள் (Electric Cycle) பற்றி இந்த பதிவில் காணலாம். 

Nexzu Mobility-யின் Roadlark மின்சார சைக்கிள் 
பெங்களூரைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பாளரான நெக்ஸு மொபிலிட்டி தனது மின்சார சைக்கிள் ரோட்லார்க்கை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கி.மீ தூரம் வரை அதை செலுத்தலாம். பேட்டரி டிஸ்சார்ஜ் ஆனாலும், நீங்கள் சைக்கிளை பெடல் செய்து ஓட்டிச் செல்லலாம். இந்த சைக்கிளில் இரட்டை பேட்டரி அமைப்பும் உள்ளது. ப்ரைமரியில் 8.7Ah இலகு ரக மற்றும் நீக்கக்கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 5.2Ah  செகண்டரி இன்-பிரேம் பேட்டரியும் உள்ளது. இந்த சைக்கிளை வீட்டில் சாதாரண வழியில் சார்ஜ் செய்யலாம். இதன் விலை 42,000 ரூபாய் ஆகும். இந்த சைக்கிள் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. 

ALSO READ:OLA Electric Scooter: இந்திய சாலைகளில் கலக்க வருகிறது, விரைவில் அறிமுகம், விவரம் இதோ

Toutche-யின் சைக்கிள் Heileo M100
பெங்களூரைச் (Bengaluru) சேர்ந்த மற்றொரு நிறுவனம் Toutche. இந்த நிறுவனம் Heileo M100 என்ற சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தில் ஏராளமான இ-சைக்கிள் வகைகள் இருந்தாலும், Heileo M100 ஒரு லாபகரமான மிதிவண்டியாக பார்க்கப்படுகின்றது. இந்த மின்சார மிதிவண்டியின் வரம்பு 60 கிலோமீட்டராகும். இதில் 0.37kWh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அதன் வரம்பை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் பேட்டரியை இலவசமாக அப்கிரேட் செய்யலாம். அதன் பிறகு அதன் ரேப்ஜ் 75 கிலோமீட்டராக அதிகரிக்கப்படும். நிறுவனம் இந்த மின்சார சைக்கிளின் விலையை GST-யுடன் சேர்த்து ரூ .49,900 ஆக நிர்ணயித்துள்ளது.

GoZero -வின் Skellig Pro மின்சார சைக்கிள்
இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் மின்சார மிதிவண்டிகளை விற்பனை செய்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து நிறுவனமான கோஜீரோ. இந்த நிறுவனம் இந்தியாவில் பல ரெஞ்சில் மின்சார சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் மிக அதிக ரேஞ்சை அளிக்கும் சைக்கிள் Skellig Pro ஆகும். இது ஒரு சார்ஜில் 70 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் 250W மோட்டார் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மிதிவண்டியில் 7 ஸ்பீடு மைக்ரோஷிஃப்ட் கியர் உள்ளது. மேலும் இந்த சைக்கிளில் இரட்டை வட்டு பிரேக்குகளும் (Dual disc brakes) கிடைக்கின்றன. GoZero Skellig Pro மின்சார சைக்கிளின் விலை ரூ .39,999 ஆகும்.

ALSO READ:WagonR EV: மின்சார வாகன சந்தையில் Maruti-யின் அதிரடி அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News