அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள்!
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஷாப்பிங் தளங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது.
அமேசான் ஃபெப் போன் ஃபெஸ்ட் 2022 மற்றும் ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 மூலம் சிறந்த ஸ்மார்ட்போன்களை அதிரடியான தள்ளுபடி விலையில் வாங்கலாம். அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஷாப்பிங் தளங்கள் சில தினங்களாக ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சிறந்த ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம். இந்த ஷாப்பிங் தளங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவது மட்டுமல்லாது எக்ஸ்சேஞ் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் தற்போது சில ஸ்மார்ட்போன்கள் சலுகைகளில் கிடைக்கின்றன அவற்றை பின்வருமாறு காண்போம்:
மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்
- ஐபோன் எஸ் இ (2022) ஆனது அமேசானில் குறைந்த விலையில் ரூ.41,900க்கு கிடைக்கிறது. ஆனால் இவை தற்போது விற்பனையில் இல்லை. ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வழியாக முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூபாய் 2,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூபாய் 13,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
- அமேசான் ஃபெப் போன் ஃபெஸ்ட் 2022-ல் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூ.59,999க்கு கிடைக்கிறது. பழைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து மாற்றிக் கொள்வதன் மூலம் ரூ.16,500 வரை தள்ளுபடியை பெறலாம். மேலும் ரூ.8000 மதிப்பில் பிளாட்டிற்கான தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இதனை ஈஎம்ஐ-யில் ரூ. 2,824 செலுத்தி பெறலாம்.
- சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூபாய் 24,999க்கு கிடைக்கிறது. பழைய போனை கொடுத்து மாற்றிக் கொள்வதன் மூலம் ரூபாய் 1,950 வரை தள்ளுபடி பெறலாம். மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாட்டிற்கான தள்ளுபடி கிடைக்கும். இதனை ஈஎம்ஐ-ல் 1,117 ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
- ஐபோன் எஸ்இ (2020) ஆனது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் ரூ.9,901மதிப்புள்ள பிளாட் தள்ளுபடியுடன், ரூ. 29,999க்கு விற்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்துவதன் மூலம் ரூபாய் 13,000 வரை தள்ளுபடி பெறலாம்.
- மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆனது குறைந்த விலையில் ரூ. 20,499க்கு விற்கப்படுகிறது. எக்ஸெல் செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட் ரூபாய் 13,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு 5% அன்லிமிட்டட் கேஷ்பேக் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR