Flipkart Year End Sale: ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பிளிப்கார்ட் சேல், இன்று (டிசம்பர் 31) நள்ளிரவு 12 மணிக்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 11:31 AM IST
  • பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனை சில நாட்களாக நடந்து வருகிறது.
  • ஒப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் ஸ்டோரேஜுடன் வருகிறது.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.15,450 வரை தள்ளுபடி பெறலாம்.
Flipkart Year End Sale: ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040 title=

Flipkart Year End Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனை (Flipkart Smartphone Year End Sale) சில நாட்களாக நடந்து வருகிறது. டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த சேல், இன்று (டிசம்பர் 31) நள்ளிரவு 12 மணிக்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த விற்பனையில், அனைத்து பிராண்டின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவில் ஓப்போ-வின் (Oppo) சிறந்த 5G ஸ்மார்ட்போனான Oppo Reno6 5G இல் உள்ள சலுகையைப் பற்றி காணலாம். இந்த போன் 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனை ரூ.35,990 விலை கொண்ட இந்த போனை வெறும் ரூ.13,040-க்கு வாங்கலாம். இந்த டாப் போனை இவ்வளவு குறைவாக எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Oppo இன் 5G ஸ்மார்ட்போனில் பெரும் தள்ளுபடி 

Oppo Reno6 5G இன் சந்தை விலை ரூபாய் 35,990 ஆகும். ஆனால் இந்த போனை பிளிப்கார்டின் ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனையில் 16% தள்ளுபடிக்குப் பிறகு 29,990 ரூபாய்க்கு வாங்கலம. 

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.15,450 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.14,540க்கு வாங்க முடியும். 

வங்கி சலுகைகள் மூலம் அதிக தள்ளுபடிகள்

இந்த பிளிப்கார்ட் (Flipkart) டீலில், எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சலுகையும் வழங்கப்படுகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்க பணம் செலுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு 5%,  அதாவது ரூ.1,500, கேஷ்பேக் கிடைக்கும். இது இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கும். 

எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பிறகு முன்பு ரூ.14,540-க்குக் கிடைத்த ஸ்மார்ட்போன் (Smartphone) இப்போது ரூ.13,040-க்குக் கிடைக்கும். இந்த வகையில் 36 ஆயிரம் விலை கொண்ட போனை 13 ஆயிரத்தில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். 

ALSO READ : Flipkart Year End Sale:மலிவான விலையில் iPhone வாங்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது 

Oppo Reno6 5G: அம்சங்கள்

ஒப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் ஸ்டோரேஜுடன் வருகிறது. MediaTek Dimensity 900 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 4,300mAh பேட்டரி கொண்டது. 

நிறுவனத்தின் கூற்றுப்படி, நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 28 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சென்சார் 64MP, இரண்டாவது சென்சார் 8MP மற்றும் மூன்றாவது சென்சார் 2MP கொண்டுள்ளது. முன் கேமராவைப் பற்றி பேசுகையில், பயனர்களுக்கு 32MP முன் கேமராவை கிடைக்கும். 

முன்பே குறிப்பிட்டது போல், விற்பனை தேதி நீட்டிக்கப்பட்ட பிறகு இந்த பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையின் கடைசி நாள் இன்று. ஆகையால் உங்கள் மனம் கவர்ந்த போனை குறைந்த குறைந்த விலையில் வாங்க விரும்பினால், இன்று உங்களுக்கான நாள்.

ALSO READ : Flipkart Year End Sale 2021: அட்டகாசமான சலுகையில் POCO ஸ்மார்ட்ஃபோன்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News