கூகிள் பிளே ஸ்டோரில் போலி CoWIN பயன்பாடுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், இல்லையெனில் நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (Coronavirus) பிடியில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போதும் பணி துவங்கியுள்ளது. இந்தியாவில், வரும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவிஷீல்டு (Covishield), கோவாக்சின் (COVAXIN) மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்த நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யயுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கொரோனா தடுப்பூசியை முறையாக விநியோகிக்கவும், தேவைப்படுபவர்களுக்கு அதை கொண்டு சேர்க்கவும், மத்திய அரசு CoWIN செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பெற்ற நபர்களின் வகையிலும் நீங்கள் வந்தால், இந்த பயன்பாட்டில் நீங்களே பதிவு செய்ய வேண்டும். இந்த பயன்பாட்டை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் Google Play Store-ல் பல CoWIN செயலியை நீங்கள் காணலாம், அவை போலியானவை. அசல் செயலியின் பெயர் CoWIN, இது இதுவரை பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இந்த போலி CoWIN பயன்பாடுகளைப் பற்றி சுகாதார அமைச்சும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மற்றும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.



ALSO READ | COVID-19 தடுப்பூசி உற்பத்தியாளரிடமிருந்து சாதாரண மக்களை எவ்வாறு சென்றடையும்?


Covid-19 சிகிச்சைக்காக இரண்டு தடுப்பூசிகளை (Covishield and COVAXIN) பயன்படுத்த ஞாயிற்றுக்கிழமை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடதக்கது. ஆனால், இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் அசல் CoWIN பயன்பாட்டில் பதிவு செய்வது கட்டாயமாகும். Google Play Store மற்றும் Apple Play Store-ல் இலவசமாகக் கிடைக்கும் CoWIN பயன்பாட்டை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செயலியின் மூலம் COVID-19 தடுப்பூசிக்கு சுய பதிவு செய்ய வேண்டும்.


CoWIN செயலி என்றால் என்ன?


COVID-19 தடுப்பூசிக்கான ஒரு தளம் CoWIN பயன்பாடு. இந்த பயன்பாடு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CoWIN (COVID Vaccine Intelligence Network) ஒரு டிஜிட்டல் தளமாக இருக்கக்கூடும், அங்கு கட்டம் கட்டும் தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் வெளியிடும். கோவின் பயன்பாட்டை பல தொகுதிகள் மூலம் தொடங்கலாம். இதில், மொத்த பதிவுக்கான நிர்வாகி தொகுதி, நன்மை பதிவு தொகுதி மற்றும் தடுப்பூசி தொகுதி ஆகியவை சுய பதிவுக்காக வழங்கப்படலாம்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR