Toll Tax: சுங்கவரி விதியில் முக்கிய மாற்றம்... இனி பணம் வசூலிக்கப்படாது!
Toll Tax: இனி சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Toll Tax: நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும், நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் சுங்கவரி செலுத்த வேண்டும், ஆனால் சுங்கவரி தொடர்பான விதிகளை மத்திய அரசு விரைவில் மாற்ற உள்ளது. இதுகுறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். சுங்க வரி தொடர்பான மசோதாவைக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
இதுகுறித்து தகவல் அளித்துள்ள அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கவரி செலுத்தாதவர்களுக்கு எந்த விதமான தண்டனையும், அபராதமோ விதிக்கப்பட திட்டமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனுடன், வரும் நாட்களில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுங்கவரி வசூலிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
விரைவில் மசோதா
மேலும், இதுவரை கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறை இல்லை என்றும், ஆனால் கட்டணம் தொடர்பான மசோதாவைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இப்போது சுங்க வரி நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இதற்கென தனி நடவடிக்கை எடுக்கப்படாது.
கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும்
இனி டோல் டாக்ஸ் செலுத்த வேண்டியதில்லை, உங்கள் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுதவிர, மத்திய அமைச்சர் கூறுகையில்,"2019இல், கம்பெனி பொருத்திய நம்பர் பிளேட்களுடன் கார்கள் வரும் என விதியை வகுத்துள்ளோம். அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் வந்த புதிய வாகனங்கள் வெவ்வேறு நம்பர் பிளேட்களைக் கொண்டுள்ளன. 2024 ஆம் ஆண்டிற்கு முன், நாட்டில் 26 பசுமையான விரைவுச் சாலைகள் தயாராகும், மேலும் சாலைகளின் அடிப்படையில் இந்தியா அமெரிக்காவிற்கு இணையாக இருக்கும். இதனுடன், வரும் நாட்களில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுங்கவரி வசூலிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.
இந்த முறை என்ன விதி?
தற்போது சுங்கச்சாவடியில் ஒருவர் 10 கி.மீ., தூரம் சென்றால் 75 கி.மீ., கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஆனால் புதிய முறையில் பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிதி நெருக்கடியில் உள்ளது என்பதை அவர் மறுத்தார். NHAI-இன் நிலை முற்றிலும் நன்றாக இருப்பதாகவும், நிதிக்கு பஞ்சமில்லை என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் இரண்டு வங்கிகளும் குறைந்த விலையில் கடன் வழங்கியதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க | ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ