ஓட்டுநர்களுக்கு நற்செய்தி... இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் - 6 மாதத்தில் வரும் புது திட்டம்

தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர அரசு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2023, 10:49 PM IST
  • தற்போது FasTags முறை செயல்பாட்டில் உள்ளது.
  • இதன்மூலம், ஏற்கெனவே சுங்கச்சாவடிகளில் வாகனம் நிற்கும் நேரம் குறைந்துள்ளது.
ஓட்டுநர்களுக்கு நற்செய்தி... இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் - 6 மாதத்தில் வரும் புது திட்டம் title=

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி, தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நீக்கம் குறித்து மீண்டும் ஒருமுறை அவர் பேசியுள்ளார்.

அதில்,"நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் கவனித்து வருகிறது. ஆறு மாதங்களில் புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டு வருவோம்" என்றார். 

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கும் வந்தது நற்செய்தி... அகவிலைப்படி உயர்வு!

முன்னோடி திட்டம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில் தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் சிஸ்டத்தின் (தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) ஒரு முன்னோடித் திட்டத்தை நடத்தி வருகிறது.

டோல் காத்திருப்பு நேரம் குறைந்தது

நிதின் கட்கரி மேலும் கூறுகையில், அரசுக்கு சொந்தமான NHAI டோல் வருவாய் தற்போது ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ளது. 2-3 ஆண்டுகளில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும். 2018-19 ஆம் ஆண்டில், டோல் பிளாசாவில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 8 நிமிடங்கள் இருந்தது. இருப்பினும், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் FASTags அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக ஆக குறைந்துள்ளது" என்றார். 

ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சிஸ்டம்

ஜிபிஎஸ் அடிப்படையிலான அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஒரு தொழில்நுட்பமாகும். மேலும் கேமராவைப் பயன்படுத்தி வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. இது கேமராவில் நிறுவப்பட்ட ஜிபிஎஸ் மூலம் வாகனத்தின் நிலையைப் பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப கட்டணத்தைக் நிர்ணயிக்கும். வாகனம் எங்குமே நிற்க வேண்டாம்.

தற்போதைய FASTags அமைப்பில், காரின் கண்ணாடியில் ஒரு குறியீடு நிறுவப்பட்டுள்ளது, அது ஒவ்வொரு டோல் பிளாசாவிலும் ஸ்கேனர் மூலம் படிக்கப்படுகிறது. ஸ்கேனர் குறியீட்டை வெற்றிகரமாகப் படித்த பிறகு, வாகனம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' - கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News