நாட்டின் மிகப்பெரிய அரசு காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) பாலிசிதாரர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. உங்களுடைய எல்ஐசி பாலிசி ஏதேனும் காலாவதியாகிவிட்டால், மார்ச் 25க்குள் அதைத் புதுப்பிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு புதுப்பிப்பு திட்டத்தின்  கீழ், மார்ச் 25 வரை  காலாவதியான உங்கள் பாலிசியைத் புதுப்பிக்கலாம். காலாவதியான பாலிசியின் பிரீமியத்தை டெபாசிட் செய்ய எல்ஐசி நிறுவனம் மார்ச் 25, 2022 வரை அவகாசம் அளித்துள்ளது. 5 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தாத, செலுத்த தவறிய 5 ஆண்டுகளுக்குள் பாலிசியை புதுப்பிக்கலாம். லேப்ஸ் ஆன பாலிசியைத் ரென்யூ செய்யும் போது, பிரீமியத்தை தாமதமாக செலுத்துவதற்கான அபராத தொகையும் குறைக்கப்படும்.


மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால் தாமதமாகிறதா வெளியீடு?


எனினும், இந்தத் திட்டத்தின் கீழ், டேர்ம் இன்ஷூரன்ஸ், மல்டிபிள் ரிஸ்க் பாலிசிகள் போன்ற அதிக ஆபத்துள்ள காப்பீட்டுத் திட்டங்களுக்கு தாமதத்திற்கான அபராத கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் எல்ஐசி சார்பில் சிறப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.


தள்ளுபடி விபரம்


இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் ரூபாய்க்கான வழக்கமான உடல்நலக் காப்பீட்டை புதுப்பிக்கையில், அபராத கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். அதே நேரத்தில், ரூ.1 லட்சத்து 1 முதல் ரூ.3 லட்சம் வரையிலான பாலிசிக்கான அபராத கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2,500 தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பாலிசியில் பிரீமியம் செலுத்தாதற்கான தாமத கட்டணத்தில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும்.


இதனுடன், பாலிசியை மீண்டும் புதுபிக்க தேவையான மருத்துவ அறிக்கையில் எந்த விதமான சலுகையும் வழங்கப்படாது. 


மேலும் படிக்க | LIC IPO: பாலிசிகளை பான் உடன் இணைக்க இன்றே கடைசி நாள், முழு செயல்முறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR