LIC IPO: பாலிசிகளை பான் உடன் இணைக்க இன்றே கடைசி நாள், முழு செயல்முறை இதோ

LIC IPO: எல்ஐசி பாலிசிகளை பான் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28, 2022, அதாவது இன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2022, 12:15 PM IST
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி பிப்ரவரி 13, 2022 அன்று செபியிடம் டிஆர்ஹெச்பியை தாக்கல் செய்தது.
  • நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் எல் ஐ சி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.
  • பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்க வேண்டும்.
LIC IPO: பாலிசிகளை பான் உடன் இணைக்க இன்றே கடைசி நாள், முழு செயல்முறை இதோ title=

எல்ஐசி பான் இணைப்பு கடைசி தேதி: சமீப கலங்களில் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு ஐபிஓ-வாக எல்ஐசி ஐபிஓ உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி பிப்ரவரி 13, 2022 அன்று செபியிடம் டிஆர்ஹெச்பியை தாக்கல் செய்தது. மார்ச் மாதத்தில் இந்த வெளியீடு பொதுமக்களுக்குத் (பப்ளிக் லிஸ்டிங்) திறக்கப்படும். 

இது நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆக இருக்கும். எல் ஐ சி ஐபிஓ டிஆர்ஹெபி-இன் படி, நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் எல் ஐ சி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நன்மையைப் பெற, பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்க வேண்டும். எல்ஐசி பாலிசிகளை பான் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28, 2022, அதாவது இன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

எல்ஐசி பாலிசிகளை பான் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை மிகவும் எளிய செயல்முறையாகும். இந்த முழு செயல்முறையையும் செய்து முடிக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

எல்ஐசி பாலிசிகளை பான் உடன் இணைக்கும் செயல்முறை பின்வருமாறு: 

ஸ்டெப் 1: முதலில், licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். 

ஸ்டெப் 2: அடுத்து, ​​முகப்புப் பக்கத்தில் இருக்கும் 'ஆன்லைன் பான் பதிவு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 3: பயனர் பான் கார்டில் இணைக்கப்பட வேண்டிய பாலிசியின் பட்டியலை கையில் வைத்திருக்க வேண்டும்

மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் 

ஸ்டெப் 4: பின்னர் 'Proceed' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5: அதன் பிறகு, தனது மின்னஞ்சல் ஐடி, பான் எண், மொபைல் எண், பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் கேப்ட்சாவை உள்ளிட்ட பிறகு 'கெட் OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 6: பின்னர் பயனர் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்

ஸ்டெப் 7: படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, வெற்றிகரமான பதிவுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதற்கான செய்தி வரும். 

எல் ஐ சி ஐபிஓ செயல்முறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, எல்ஐசி ஐபிஓவில் 20 சதவீதம் வரை முதலீடு செய்யும் அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

கூடுதல் விவரங்கள் மற்றும் வினவல்களுக்கு, licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யலாம். 

எல்ஐசி ஐபிஓ குறித்த மேலும் பல சமீபத்திய தகவல்களுக்கு இங்கே CLICK செய்யவும். 

மேலும் படிக்க | LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News