மாநில அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பழைய ஓய்வூதியம் கிடைக்காது.. ஷாக் கொடுத்த மாநில அரசு
Old Pension Scheme: தேசிய ஓய்வூதியத்தில் பழைய ஓய்வூதியத்தை விட அதிக பலன்கள் இருப்பதால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது: அரசாங்கம்.
பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது.
இதற்கிடையில் பல மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) அமல்படுத்தியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த யோகி அரசு மறுத்துவிட்டது. 'பழைய ஓய்வூதியத்தை அரசு மீண்டும் கொண்டு வராது. புதிய ஓய்வூதியத்தில் ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும்' என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் சட்டசபையில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் பலர் பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா, தேசிய ஓய்வூதியத்தில் பழைய ஓய்வூதியத்தை விட அதிக பலன்கள் இருப்பதால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது என தெளிவுபடுத்தியுள்ளார்.
ஊழியர்களின் ஓய்வூதியத்தில் 25 சதவீதம் அரசிடமும், 15 சதவீதம் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களிடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் கன்னா தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 3.36 லட்சம் ஆசிரியர்களும், 5.59 லட்சம் ஊழியர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் இதை பற்றி அகிலேஷ் யாதவ் அறிவித்தார்
தேர்தலின் போது, "சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் அமல்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இதன் மூலம் மாநில அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என பல மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். நான் ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசியுள்ளேன். இந்த நிதியை உருவாக்க தேவையான நிதி திரட்டப்படும் என்று தெரிய வந்துள்ளது' என்று அகிலேஷ் யாதவ் அப்போது தெரிவித்தார்.
மேலும் படிக்க | வங்கி கணக்கு முடக்கப்படலாம்... Re-KYC இன்னைக்கே பண்ணிடுங்க...!
பழைய ஓய்வூதிய முறை பற்றிய தகவல்கள்
2004 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு தெளிவான ஓய்வூதியத்தைப் பெற்று வந்ததாக வரி மற்றும் முதலீட்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த ஓய்வூதியமானது பணியாளரின் சேவைக் காலத்தை சார்ந்து இல்லாமல் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் வாங்கிய சம்பளத்தை சார்ந்தாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற ஊழியர் இறந்த பிறகு, அவரது குடும்பத்துக்கும் ஓய்வூதிய வசதி கிடைத்தது.
2004 முதல் மாற்றங்கள் செய்யப்பட்டன
2004 முதல், ஆயுதப்படைகளைத் தவிர அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் NPS திட்டத்தில் இருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர். இத்திட்டத்தில் அரசு 14 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதில் ஊழியர்களும் பங்களிக்கிறார்கள். மேலும் ஓய்வு பெறும் நேரத்தில், பணியாளரின் பெயரில் ஒரு நிதி உருவாக்கப்படுகிறது. அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த கார்பஸிலிருந்து ஒரு பத்திரத்தை வாங்க வேண்டும். இந்த நிதியின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்... அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ