UPS Pension Scheme : ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு  மாற்றாக இந்தப் புதிய திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர், பணிபுரியும் இறுதி12 மாதங்களில் பெற்ற சராசரி மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியத்தை பெறலாம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.  


மேலும் படிக்க | PMAY-Urban 2.0 திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி: யார் விண்ணப்பிக்கலாம்? விதிமுறைகள் என்ன?


அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்ட ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படும்.  , பணிஓய்வு பெறும் நேரத்தில் மொத்த தொகையைப் பெறுவார்கள். ஓய்வூதியத்தொகை என்பது, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாக இருக்கும்.  


ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து அவர்களின் சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்பது முக்கியமான விஷயமாக இருந்தாலும், இதைத் தவிர வேறு பல முக்கியமான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.


தற்போதைய ஒய்வூதிய திட்டத்தின்படி, ஓய்வூதிய நிதிக்கு, ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 10% பங்களிக்க வேண்டும். அரசின் பங்களிப்பு 14 சதவிகிதமாக இருக்கும். புதிய ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18 ஆக அதிகரிக்கப்படுகிறது.


ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஒருவர் 10 ஆண்டுகள் பணி புரிந்துவிட்டு, பணியில் இருந்து வெளியேறினால், அந்த ஓய்வூதியதாரருக்கு 10,000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.


மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சுமார் 2.3 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். NPS மற்றும் UPS என இரு ஓய்வூதியத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் தெரிவு பணியாளர்களுக்கு இருக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது பணவீக்க அட்டவணைப்படுத்தலுடன் இணைக்கப்பட்ட நன்மைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.


மேலும் படிக்க | செப்டம்பரில் டிஏ ஹைக், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ