வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ஐடிஆர் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை
ITR Filing: சம்பளம் பெறும் வகுப்பினர் தங்கள் ITR ஐ எளிதாக தாக்கல் செய்ய, அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் / முதலாளியால் வழங்கப்பட்ட படிவம்-16 (Form-16) அவசியமாகும்.
வருமான வரி அறிக்கை: வருமான வடி தாக்கல் செய்யும் நபரா நீங்கள்? நீங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை ஐடிஆர் -க்கான ஆன்லைன் படிவங்கள் வருமான வரித்துறையால் வழங்கப்படவில்லை. ஆனால் 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிபிடிடி (CBDT) மூலம் பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஆஃப்லைன் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்கள் வந்துள்ளன.
யாரெல்லாம் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை நிரப்ப முடியும்?
வருமான வரித் துறையின் இணையதளத்தின்படி, '2023-24 ஆம் ஆண்டிற்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 இன் எக்செல் யுடிலிட்டி ஃபைலிங்குக்கு கிடைக்கிறது.' மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாக அல்லது ரூ.50 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ஐடிஆர்-1 படிவம் பொருந்தும். மேலும், அவர்களுக்கு வீடு மற்றும் பிற ஆதாரங்கள் மற்றும் விவசாயம் மூலம் ரூ.5,000 வரை வருமானம் இருந்தாலும் இது பொருந்தும். இது தவிர, ஐடிஆர்-4 (ITR-4) என்பது தனிநபர் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பத்திற்கானது.
மேலும் படிக்க | வரி செலுத்துவோர் கவனத்திற்கு! ஜூலை 31 க்கு முன் ITR தாக்கல் செய்து விடுங்கள்!
ஐடிஆர்-4 இவர்களுக்கானது
உங்கள் வருமானம் ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அல்லது 44AD, 44ADA அல்லது 44AE பிரிவின் கீழ் விவசாயத்திலிருந்து ரூ. 5000 வரை வருமானம் இருந்தால் வணிகம் அல்லது மருத்துவம்-வழக்கறிவு போன்ற தொழில்களில் வருமானம் இருந்தால், ITR-4 உங்களுக்கான படிவமாகும் ஆஃப்லைன் முறையில், வரி செலுத்துவோர் அதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அதை நிரப்பி துறையின் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இருப்பினும், மறுபுறம், வரி செலுத்துவோர் ஆன்லைன்படிவத்திலும் வருமான வரி போர்ட்டலில் நேரடியாக தங்கள் வருமானத்தைப் பற்றிய தகவல்களை வழங்கலாம்.
சம்பளம் பெறும் வகுப்பினர் தங்கள் ITR ஐ எளிதாக தாக்கல் செய்ய, அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் / முதலாளியால் வழங்கப்பட்ட படிவம்-16 (Form-16) அவசியமாகும். வேலை வழங்குநர் படிவம்-16 ஐ வெளியிடுவதற்கான கடைசி தேதி ஜூன் 15 ஆகும். இந்த வகையில் வரி செலுத்துபவர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. படிவம்-16ன் அடிப்படையில், ஜூலை 31, 2023க்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ