Income Tax Return: படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியுமா?

Income Tax Return: படிவம் 16 இல்லாத நபர்கள் தங்கள் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பற்றிய தகவல்களை படிவம் 26AS-லிருந்து பெற்றுக்கொள்ளலாம்.    

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 03:11 PM IST
  • படிவம் 16 என்பது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான ஒரு முக்கியமான ஆவணமாகும்.
  • படிவம் 26AS-லிருந்து டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
  • படிவம் 26AS-ஐ டவுன்லோடு செய்ய வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவேண்டும்.
Income Tax Return: படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியுமா?  title=

Income Tax Return: 2023-24 புதிய நிதியாண்டு தொடங்கும் போது ​​இந்தியாவில் சம்பளம் பெறும் நபர்கள் வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும்.  பொதுவாக சம்பளம் பெறும் நபர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய படிவம் 16-ஐ பயன்படுத்தினாலும் இது எப்போதும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.  படிவம் 16 பணியாளரின் வரிக்குட்பட்ட வருமானத்தின் விரிவான கணக்கை வழங்குகிறது, ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் கீழ் சம்பளம் பெறாதவர்கள் இந்த படிவத்தை பெற முடியாது.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் இன்னும் தாக்கல் செய்யப்படலாம்.  படிவம் 16 என்பது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான ஒரு முக்கியமான ஆவணமாகும், ஏனெனில் இது தனிநபரின் முழு வருமானம், விலக்கு விவரங்கள், டிடிஎஸ் தகவல் மற்றும் முதலீடுகள் பற்றிய கணக்கை வழங்குகிறது.

மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!

படிவம் 16 இல்லாத நபர்கள் தங்கள் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பற்றிய தகவல்களை படிவம் 26AS-லிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  இந்த படிவம் முன்கூட்டிய வரி செலுத்துதல்கள், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் போன்ற நிதி தொடர்பான பல முக்கியமான தகவல்களை வழங்குகிறது.  படிவம் 16 இல்லாமல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய தனிநபர்கள் தங்களது சம்பள சீட்டு, ஹெச்ஆர்ஏ சீட்டு, வருமான வரிச் சட்டத்தின் 80சி மற்றும் 80டியின் கீழ் முதலீடு செய்ததற்கான ஆதாரம் மற்றும் வீட்டுக் கடன் செலுத்தியதற்கான ஆதாரம் போன்ற முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

1) படிவம் 26AS-ஐ டவுன்லோடு செய்ய, வருமான வரி இணையதளத்திற்குச் சென்று இ-ஃபைல் போர்ட்டலை கிளிக் செய்ய வேண்டும்.  

2) அதன் பின்னர் 'My Account' எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

3) அதன்பிறகு, 'View Form 26AS' எனும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

4) அடுத்ததாக மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து, டைம் பட்டனை கிளிக் செய்யவேண்டும். 

5) இறுதியாக படிவத்தை டவுன்லோடு செய்யும் ஆப்ஷனை க்ளிக் செய்ததும், படிவம் டவுன்லோடு செய்யப்படும்.

மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News