இந்திய ரயில்வே புதுப்பிப்பு: அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணிகளுக்கு பல வசதிகள் ரயில்வே மூலம் அவ்வப்போது இலவசமாக செய்து தரப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், ரயில்வேயின் இந்த விதிகளை மனதில் கொள்ளுங்கள். ரயில்வே அளிக்கும் வசதியின் மூலம் அப்போது உங்களுக்கு இலவச உணவும் கிடைக்கும். எந்தப் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


பயணிகள் உணவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை


ரயில்வே துறையின் ஒரு விதியின் படி, பயணம் செய்யும் பயணிகள் உணவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில் நாம் காணவுள்ள வசதியை பயணிகள் பல முறை பயன்படுத்திக்கொள்ளலாம். பல நேரங்களில் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையாமல் தாமதமாக வரும். ஆனால், ரயில் தாமதமாக வரும்போது, ​​ரயில்வே தரப்பில் இருந்து இலவச உணவு வசதி தரப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால், இந்த வசதியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | Indian Railways: நாட்டின் முதல் ஏசி ரயில்... ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்!


IRCTC விதி


ஐஆர்சிடிசி விதிப்படி பயணிகளுக்கு இலவச உணவு வசதி அளிக்கப்படுகிறது. உங்கள் ரயில் இலக்கை அடைய 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஆகும்போது இந்த வசதி கிடைக்கும். ஆனால் இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களும் இந்த ரயில்களில் பயணம் செய்து, ரயில் தாமதமானால், கண்டிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


ரயில்வே விதிகளின்படி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளும் இந்த வசதியைப் பெறுகின்றனர். ஏதேனும் காரணத்தால் ரயிலைத் தவறவிட்டாலும், விதிகளின்படி பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்காக, ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்


ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?


ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்


மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.


இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது


இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை. 


மேலும் படிக்க | நாளை முதல் மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ