என்னது ஒரு ரயிலையே முன்பதிவு செய்யலாமா... அது எப்படி?

Indian Railways: ஒரு முழு ரயில் அல்லது ஒரு முழு பெட்டியையும் முன்பதிவு செய்வது எப்படி, அதற்கு எவ்வளவு செக்யூரிட்டி டெபாசிட்டை செலுத்த வேண்டும் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2023, 02:53 PM IST
  • குறைந்தபட்சம் 30 நாட்கள் அல்லது அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும்.
  • குறைந்தது 2 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்.
  • பயணம் முடிந்ததும், பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவீர்கள்.
என்னது ஒரு ரயிலையே முன்பதிவு செய்யலாமா... அது எப்படி? title=

Indian Railways: நீண்ட தூர பயணத்திற்கு பலரின் விருப்பமான போக்குவரத்து என்பது ரயில் தான். ஒவ்வொருவரும் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், ஒரு ரயிலின் முழுப் பெட்டியும் அல்லது ஒட்டுமொத்த ரயிலையும் முன்பதிவு செய்து அதில் பயணிக்கும்போது அந்த அனுபவம் வேறு விஷயம். நீங்கள் ஒரு முழு ரயில் அல்லது ஒரு முழு பெட்டியையும் முன்பதிவு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி செய்வது என்று மக்கள் மிகவும் குழப்பமடைகிறார்கள். 

மறுபுறம், நீங்கள் முழு ரயிலையும் முன்பதிவு செய்தால், எந்த நிலையத்தில் இருந்தும் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். முழு ரயில் அல்லது ஒரு முழு பெட்டியை நீங்கள் எப்படி முன்பதிவு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

முன்பதிவு காலம்

IRCTC FTR-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நீங்கள் ஒரு ரயில் அல்லது ரயில் பெட்டியை முன்பதிவு செய்யலாம். இதற்கு, பயணத்திற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் அல்லது அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு FTR ரயிலில் குறைந்தது 2 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், FTR ரயிலில் 24 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. டிக்கெட் விலை குறைப்பு, இனி பாதி கட்டணம் தான்

பாதுகாப்பு டெபாசிட்

ஆன்லைன் முன்பதிவில் பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும். 18 பெட்டிகளுக்கு குறைவாக முன்பதிவு செய்தால், 50,000 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும், அதேசமயம் இதற்கு மேல் இருந்தால், இந்தத் தொகை ரூ.9 லட்சமாகும்.

இது போன்ற ரயில் அல்லது கோச் முன்பதிவு செய்ய, நீங்கள் செல்ல வேண்டும் IRCTC FTR-இன் இணையதளத்திற்கு www.ftr.irctc.co.in செல்லவும். இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையவும். முழுமையான ஒரு பெட்டியை முன்பதிவு செய்ய FTR இன் சேவை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இதற்குப் பிறகு, தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளிடவும். இப்போது கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தவும்.

IRCTC இந்த வசதிகளை வழங்குகிறது

உங்கள் பயணம் முடிந்ததும், பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவீர்கள். கேட்டரிங் வரம்பின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வரம்பிற்கு ஏற்ப IRCTC உங்களுக்கு கேட்டரிங் சேவையையும் வழங்குகிறது. எந்த காரணத்திற்காகவும் நீங்கள் முன்பதிவை ரத்து செய்தால், முழு பணத்தையும் திரும்பப் பெற முடியாது. 

மேலும் படிக்க | மொபைலில் ஈஸியாக ரயில் டிக்கெட் எடுத்தாலும்... இதை நியாபகம் வச்சுக்கோங்க மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News