பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய அப்டேட்: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை வலியுறுத்தி பல போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையில் பல பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஓராண்டில், பல மாநில அரசுகளால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பல மாநிலங்களில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி, ஊழியர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ராஜஸ்தானின் அசோக் கெஹ்லாத் அரசுதான் முதன்முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுத்தது. இந்த நிலையில், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஆர்எஸ்ஆர்டிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.


இத்தகைய ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு தகுதியற்றவர்கள்


பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, பழைய ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்ய விரும்பும் ஊழியர்கள், ஜூன் 30 -க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சிபிஎஃப் திட்டத்தில் உறுப்பினராக கருதப்படுவார்கள்.


குடும்ப உறுப்பினர்களும் விண்ணப்பிக்கலாம்


இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் குடும்ப ஓய்வூதியத்திற்காக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (ஓபிஎஸ்) விண்ணப்பிக்கலாம். வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், தன்னாட்சி அமைப்புகள், செமி தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் (ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நிறுவப்பட்டது) பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த மாநில நிதித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.


நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், 'பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்காத ஊழியர்களின் பங்களிப்பு, பல்கலைக்கழகங்களின் முறைப்படி செய்யப்படும். அதாவது, முதலாளியின் பங்கு மற்றும் பணியாளரின் பங்கில் இருந்து தலா 12% செலுத்த வேண்டும். முதலாளியின் பங்கு ஓய்வூதிய நிதிக்கும், பணியாளரின் பங்கு GPF நிதிக்கும் செல்லும்.' என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!


அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்


சமீபத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகள் (அன்ஃபண்டட் பென்ஷன் லயபலிடீஸ்) பிரச்சனை வரக்கூடும் என ஆர்பிஐ கூறியுள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் போன்ற நாட்டின் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில் அடங்கும். இதைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களின் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாநில அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.


என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்


என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.


என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.


இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்


ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Old Pension அதிரடி அப்டேட்: இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், குஷியில் ஊழியர்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ