புதுடெல்லி: இட்லிகளை (Idlis) "most boring” அதாவது “மிகவும் சலிப்பான" உணவு என்று கூறிய ஒரு பிரிட்டிஷ் பேராசிரியருக்கு ட்விட்டரில் பாரதப் புதல்வர்கள் பாடம் புகட்டி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தை (England) தளமாகக் கொண்ட வரலாற்றுப் பேராசிரியரும், இந்தியா-பிரிட்டன் ஆய்வுகளில் நிபுணருமான எட்வர்ட் ஆண்டர்சன் (Edward Anderson), ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தார். "மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு உணவுப்பண்டம் எது?" என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு ஆண்டர்சன், "இட்லி தான் உலகில் மிகவும் போரிங்கான உணவு” என்று பதிலளித்தார்.



ஆண்டர்சன் மேலும் கூறுகையில், "தென்னிந்தியா முழுவதும் என்னைத் தாக்கும் முன், எனக்கு தோசை மற்றும் அப்பம் மிகவும் பிடிக்கும் என்றும் அடிப்படையில் அனைத்து தென்னிந்திய உணவுகளையும் விரும்புகிறேன் என்று சொல்லிக்கொள்கிறேன். ஆனால், இட்லி, ஏன், புட்டு கூட அவ்வளவு பொருத்தமில்லாத உணவுகள்" என்று எழுதினார்.


இந்த இடுகை பல தென்னிந்தியர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து இட்லி பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் (Sashi Tharoor) மற்றும் அவரது மகன் இஷான் தரூர் ஆகியோரின் கவனத்தையும் அது ஈர்த்தது.


ALSO READ: WATCH: இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் புதுவித முக கவசம்..!


"ட்விட்டரில் மிகவும் தாக்கும் வகையான ஒரு கருத்தை நான் இப்போது பார்த்ததாக நினைக்கிறேன்," என்று இஷான் தரூர் ட்வீட் செய்துள்ளார்.


அதற்கு பதிலளித்த சஷி தரூர், "ஆம், என் மகனே, இந்த உலகில் உண்மையிலேயே சிலர் போதுமான முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். நாகரிகத்தைப் பெறுவது கடினம். இட்லிகளைப் பாராட்ட, கிரிக்கெட்டை ரசிக்க, அல்லது ஒட்டம்துள்ளலை பார்க்க..இப்படி சில விஷயங்களை அனுபவிக்கும் ரசனையும் சுவையும் அனைத்து மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதில்லை. பாவம் இந்த மனிதர். இவருக்கு வாழ்க்கையைப் பற்றி இன்னும் தெரியவில்லை” என எழுதினார்.



அதற்கு ஆண்டர்சன் பதிலளிக்கையில், "தென்னிந்தியா முழுவதையும் (மற்றும் அதன் சர்வவல்லமையுள்ள புலம்பெயர்ந்தோரையும்) ட்விட்டரில் (Twitter) தற்செயலாக கோபப்படுத்தியதால், மதிய உணவுக்கு இட்லிகளை ஆர்டர் செய்வதுதான் சரியானது. எனினும் என்னுடைய இந்த ஒப்புக்கொள்ளப்படாத கருத்து அப்படியேதான் உள்ளது” என்று எழுதினார்.



இவ்வளவு நடந்தும் இட்லிகள் குறித்த அவரது கருத்து மாறியதாகத் தெரியவில்லை. 


ALSO READ: ஒரு பானையை சுமக்கும் 3 பெண்கள்... ஓவியம் கூறும் கருத்து என்ன தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR