Budget 2023: எதன் விலை உயருகிறது?, எதன் விலை குறைகிறது?
Union Budget 2023-24: பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த இதில் காணலாம்.
Budget 2023: 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை உச்ச வரம்பு, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ஆகியவற்றை உயர்த்தி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புளுக்கு மத்தியில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பல்வேறு வரி விதிப்புகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதால், பல பொருள்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது, குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த இதில் காணலாம்.
விலை உயரக்கூடியவை:
மின்சார சமையலறை புகைபோக்கி
தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருள்கள்
வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்கள்
செப்பு பொருள்கள்
ரப்பர்களால் செய்யப்பட்டவை
சிகரெட்டுகள்
விலை குறைய கூடியவை:
தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள்
டிவி பேனல்களின் பாகங்கள்
லித்தியம் அயன் பேட்டரிகள்
நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்
அமில-தர ஃப்ளோர்ஸ்பார்
உள்நாட்டில் உற்பத்தியாகும் இரால்
வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள்
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
பொருளாதார மீட்சி
நாடு முழுவதும் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நிதியாண்டுக்கான (2023-24) வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பதற்கான முறையான பயிற்சி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கியது.
வரும் 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட 7 சதவீதமாகவும், 2021-22ல் 8.7 சதவீதமாகவும் இருந்தது.
கொரோனா தொற்று நோயில் இருந்து இந்தியாவின் பொருளாதார மீட்சி நிறைவடைந்துவிட்டதாகவும், வரும் 2023-24ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 6 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் 7 சதவீதமாகவும், 2021-22ல் 8.7 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ