சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள்: மத்திய அரசு தனது குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், நிதி பாதுகாப்பை அளிக்கவும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யபப்டுகின்றன. இவற்றில் முதியவர்களுக்கான நலத்திட்டங்களும் அடங்கும். முதியவர்களுக்கான சில நல்ல ஓய்வூதிய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள்


நாட்டின் மூத்த குடிமக்களின் நிதிப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல ஓய்வூதியத் திட்டங்களை வழங்குகிறது. ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள். இன்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய அரசின் சில சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana)


இந்திய அரசு அனைத்து இந்தியர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிதிப் பாதுகாப்பிற்காக 2015 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எவரும் தனது பணத்தை டெபாசிட் செய்யலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், ஓய்வூதியமாக 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.


தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System)


தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், எந்தவொரு இந்திய குடிமகனும் 18 வயது முதல் 70 வயது வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். 60 வயது நிறைவடைந்தவுடன், அந்த நபருக்கு மொத்த தொகை ரொக்கம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10,000 ரூபாய் வரை மாத ஓய்வூதியம் பெறும் வசதி உள்ளது.


மேலும் படிக்க | ஆசிரியர்கள்-ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்! ஓய்வு பெறும் வயதில் மாற்றம்?


தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Program)


மத்திய அரசின் தேசிய சமூக உதவியாளர் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.200 முதல் ரூ.500 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள நபர் இறந்தால், குடும்பத்திற்கு ரூ.20,000 ஒரு முறை உதவியாக வழங்கப்படுகிறது.


இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme)


மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ், 70 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 ஆண்டுகள் நிறைவடையும் போது, ஓய்வூதியம் மாதம் ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது.


மூத்த குடிமக்களுக்கு மற்றொரு முக்கிய செய்தி:


நாட்டின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. பல வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன, அதன் பிறகு மூத்த குடிமக்கள் 9% வரை வட்டியைப் பெறுகிறார்கள். இது மூத்த குடிமக்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தியாக வந்துள்ளது.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வணிகம், என்பிஎஃப் சி (NBFC), கூட்டுறவு வங்கி, வீட்டு நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.


மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் செய்தி: இலவச எண்ணெய், சர்க்கரை.. வாரி வழங்கும் மாநில அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ