ஆசிரியர்கள்-ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்! ஓய்வு பெறும் வயதில் மாற்றம்?

உத்தரபிரதேச அரசு ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம். ஏனெனில் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களால் வைக்கப்பட்டு வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 21, 2023, 03:48 PM IST
  • ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம்.
  • மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தத் தயார்.
ஆசிரியர்கள்-ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்! ஓய்வு பெறும் வயதில் மாற்றம்? title=

ஊழியர்களர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வதில் மாற்றம்: அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பை மீண்டும் ஒருமுறை காணலாம். அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம். இதற்காக அப்டேட் இன்று அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம். மேலும் இந்த கூட்டத்தில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு, ஒரே மாதிரியான கட்டணம் மற்றும் பணிக்கொடைக்கான எதிர்ப்பு, ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் முடிவு எடுக்கப்படும்.

ஆசிரியர்களின் ஓய்வு  பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம்.
இந்நிலையில் உத்தரபிரதேச அரசு ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம். ஏனெனில் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களால் வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கை தொடர்பாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறவிஇருக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். எனவே உயர்கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடிச்சது மெகா ஜாக்பாட்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் கிரேச்யுடி வழங்க கோரிக்கை வைப்பு
மாநிலத்தின் பல்வேறு ஆசிரியர் மற்றும் பணியாளர் அமைப்புகளின் உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், முதன்மை கவுன்சில் ஆகியோருடன் ஒரு சந்திப்பு திட்டமிட்டுள்ளார். இதில் இது ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் கிரேச்யுடியையும் வழங்க கோரிக்கை வைக்கப்படும். அதேபோல் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உயர்கல்வி அமைச்சருடன் பணியாளர் அமைப்புகளும் விரிவாக விவாதிக்கலாம். இந்த முக்கிய கூட்டமானது தலைமைச் செயலக கட்டிடத்தில் நடைபெறும் என உயர்கல்வித்துறை சிறப்பு செயலாளர் அகிலேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தத் தயார்
மறுபுறம் உத்தரப்பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக ஆக்குவதற்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அரசும் இதற்கான முடிவை தற்போது எடுத்துள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும். உத்தரபிரதேசத்தில் கடுமையான டாக்டர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பணி ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ள நிலையில், தற்போது இது 65 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. எனவே இதன்படி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது மேலும் 3 ஆண்டுகளாக அதிகரிக்குப்படும் என்று கூறப்படுகிறது.

இதனுடன், மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மறுவேலைவாய்ப்பு திட்ட விதியும் மாற்றப்படும். இது முன்பை விட நிதானமாகவும் கவரும் விதமாகவும் இருக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகும் (Retirement Age Hike) மருத்துவர்களின் சேவையை எளிதாகப் பெற முடியும். அதுமட்டுமின்றி கூடிய விரைவில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனுடன், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்துவது குறித்தும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதாவது இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News