ஓய்வூதியதாரர்களுக்கு பம்பர் செய்தி: அதிக ஓய்வூதியம் பெற இந்த தேதிக்குள் இதை செய்யவும்
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. முன்பை விட இப்போது அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது.
ஓய்வூதிய செய்திகள் புதுப்பிப்பு: மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. நீங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அவ்வப்போது, அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. முன்பை விட இப்போது அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆம், மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காவிட்டால் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது.
அரசு கடைசி தேதியை நீட்டித்துள்ளது
அதிக ஓய்வூதியம் பெற மே 3, 2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது. விண்ணப்ப தேதியை இபிஎஃப்ஓ நீட்டித்துள்ளது. இதற்கு முன் மார்ச் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்த நிலையில், தற்போது அதை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இபிஎஃப்ஓ தகவல் அளித்தது
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகள் / நிறுவனங்களுடன் மே 3, 2023 க்குள் அதிக ஓய்வூதியத்திற்கு கூட்டாக விண்ணப்பிக்க முடியும். ஓய்வூதிய நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி உயர் ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய கடைசித் தேதி என்று முன்பு கூறப்பட்டிருந்தது. இபிஎஃப்ஓ -இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட URL, அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதி மே 3, 2023 என்று தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் படிக்க | Old Pension ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: நிதியமைச்சர் அறிவித்த பெரிய முடிவு
நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது
முன்னதாக உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 அன்று தனது உத்தரவில், இபிஎஃப்ஓ அனைத்து தகுதியான உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைகிறது. ஆகையால், இதை செய்வதற்கான காலக்கெடு மார்ச் 3, 2023 என்று நம்பப்பட்டது.
இதற்கு முன்னர் 2014-ல் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது
கடந்த வாரம் இபிஎஃப்ஓ அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. நவம்பர் 2022 இல், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 2014 ஐ அப்படியே தொடர முடிவு செய்தது. முன்னதாக, ஆகஸ்ட் 22, 2014 இன் இபிஎஸ் திருத்தம், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது. மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் தங்கள் அசல் சம்பளத்தில் 8.33 சதவீதத்தை EPS -க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக இபிஎஃப்ஓ தனது கள அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு மோடி அரசின் மெகா திட்டம்... என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ