PPF account: பிபிஎஃப் கணக்குதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் மத்திய அரசின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த மாதம் முழுவதும் வட்டியினை பெறலாம். ஒரு முதலீட்டாளர் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை ரூ.1.5 லட்சம் முழுவதையும் டெபாசிட் செய்தால் அவருக்கு 5 ஆம் தேதிக்கு முன் செலுத்தப்பட்ட பங்களிப்புடன் சேர்க்கப்பட்ட வட்டியின் பலன் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாதத்தின் 5 ஆம் தேதிக்கும் மாதத்தின் கடைசி நாளுக்கும் இடையே உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையில் கணக்கிடப்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் பணத்தை டெபாசிட் செய்தால் அவர்களுக்கு அந்த மாதம் முழுவதும் வட்டி கிடைக்கும். அதுவே மாதத்தின் 5 ஆம் தேதிக்குப் பிறகு டெபாசிட் செய்தால் அந்த மாதம் முழுவதும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டி குறைந்து பண இழப்பு ஏற்பட்டும்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், நிதி அமைச்சகம் புதிய அப்டேட் வெளியீடு
பிபிஎஃப் திட்டத்தில் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் நிதியாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31 ஆம் தேதி வட்டி முதலீட்டாளருக்கு வரவு வைக்கப்படும். முதலீட்டாளர் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் ரூ. 1.5 லட்சத்தை கணக்கில் டெபாசிட் செய்யும் போது, ஏப்ரல் 5 முதல் மாத இறுதிக்குள் மிகக் குறைந்த கணக்கு இருப்புக்கு 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். விதிகளின்படி நிதியாண்டின் இறுதியில், ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.1.5 லட்சத்திற்கு ரூ.10,650 வட்டி கிடைக்கும். ஆனால் ஏப்ரல் 5 க்குப் பிறகு டெபாசிட் செய்தால் வட்டி கிடைக்காது. தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 1.5 லட்சம் டெபாசிட்டுக்கு ரூ.9,762.50 வருமானமாக இருக்கும்.
பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை என 15 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்தால், ஒவ்வொரு வருடமும் ரூ. 18,18,209 வருமானமும், 15 ஆண்டுகளின் முடிவில் முதிர்வுத் தொகையாக ரூ.40,68,209 கிடைக்கும். ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்பவர்களுக்கு வருடத்தில் ரூ.18,18,209க்கு பதிலாக ரூ.15,48,515 வருமானமும், முதிர்வுத் தொகையானது ரூ.40,68,209க்கு பதிலாக ரூ.37,98,515 கிடைக்கும். முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் பிபிஎஃப் கணக்கில் ரூ.12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டு முதிர்வுக்கு பிறகு அவருக்கு ரூ.39,44,599 கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ