UAN எண்ணை வைத்து உங்கள் EPF இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?

இபிஎஃப் இருப்பை சரிபார்க்க யூஏஎன் எண் அவசியம், யூஏஎன் எண் என்பது இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கும் வழங்கப்படும் 12 இலக்க எண்ணாகும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 07:59 AM IST
  • இபிஎஃப்ஓ, அதன் உறுப்பினர்களுக்கு ஏராளமான ஆன்லைன் வசதிகளை வழங்கி வருகிறது.
  • யூஏஎன் எண் என்பது இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கும் வழங்கப்படும் 12 இலக்க எண்ணாகும்.
  • இபிஎஃப் இருப்பை சரிபார்க்க யூஏஎன் எண் அவசியம்.
UAN எண்ணை வைத்து உங்கள் EPF இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?  title=

பெரும்பாலான சம்பளம் பெறும் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு அமைப்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) செயல்படுகிறது.  இபிஎஃப் ஆனது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்படுகிறது.  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இபிஎஃப்ஓ, அதன் உறுப்பினர்களுக்கு ஏராளமான ஆன்லைன் வசதிகளை வழங்கி வருகிறது.  இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இந்த ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களின் இபிஎஃப் கணக்கை நிர்வகிப்பது போன்ற பல வேலைகளை எளிதாக செய்து கொள்ளலாம்.  இபிஎஃப் இருப்பை சரிபார்க்க யூஏஎன் எண் அவசியம், யூஏஎன் எண் என்பது இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கும் வழங்கப்படும் 12 இலக்க எண்ணாகும்.

மேலும் படிக்க | PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இபிஎஃப்ஓ ​​வழங்கும் பல்வேறு வசதிகளை பெற வேண்டுமானால் யூஏஎன்-க்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம்.  நீங்கள் யூஏஎன்-ஐ உங்கள் முதலாளியிடமிருந்தோ அல்லது  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்தோ அல்லது அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திலிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.  நீங்கள் யூஏஎன் எண்ணைப் பெற்றவுடன், இபிஎஃப்ஓ ​​போர்ட்டலில் பதிவு செய்து அதை செயல்படுத்த வேண்டும். 

1) இபிஎஃப்ஓ-ன் இணையதளத்திற்குச் சென்று 'யூஏஎன் ஆக்டிவேஷன்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

2) உங்கள் யூஏஎன் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும்.

3) விவரங்களை உள்ளிட்ட பிறகு, பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும்.

4) பாஸ்வேர்டை தேர்வு செய்ததும், இபிஎஃப்ஓ போரட்டலில் உள்ள அனைத்து வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

யூஏஎன் எண்ணை பயன்படுத்தி பிஎஃப் இருப்பை சரிபார்த்தல்:

1) இபிஎஃப்ஓ-ன் போரட்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.

2) உறுப்பினர் பாஸ்புக்கை அணுக, முகப்புப் பக்கத்திற்குச் சென்று, மெனு பட்டியில் உள்ள "For Employees" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

3) கீழே உள்ள மெனுவிலிருந்து "Services" என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4) லாக் இன் செய்த பிறகு உறுப்பினர் ஐடிகளின் பட்டியலைக் காணலாம்.

5) இப்போது "View Passbook" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

6) முதலாளி செய்த பங்களிப்புகள் மற்றும் பிற பரிவர்த்தனை தகவல்கள் காண்பிக்கப்படும்.

7) பிஎஃப் பாஸ்புக்கின் நகலைப் பெற "Download Passbook" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

8) இப்போது உங்கள் இபிஎஃப் பாஸ்புக்கின் PDF ஃபைலை டவுன்லோடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 7 விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News