Second Hand Cars: சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலும் அனைவரது கனவுமாக உள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் சொந்த கார்களில் பயணிக்க விடும்புகிறார்கள். பொதுப் போக்குவரத்து நெரிசலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், கார் மிகவும் அவசியமாகிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், கொரோனா தொற்றுநோய் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், செகண்ட் ஹேண்ட் கார்கள் (Second Hand Car) மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, ​​கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கவும் கடன் வசதியை (2nd Hand Car Loan) வழங்குகின்றன.


செகண்ட் ஹேண்ட் கார் கடன் வாங்கும்போது இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்


வங்கியில் இருந்து எந்த வகையான கடன் வாங்கினாலும், அதில் முக்கியமான விஷயம் வட்டி விகிதம் (Rate of Interest) பற்றியதுதான். நீங்களும் வங்கிக்கடன் வாங்க விரும்பினால், கடனுக்கான வட்டி விகிதம் குறித்து ஆராய்ச்சி செய்வது முக்கியமாகும். செகண்ட் ஹாண்ட் கார்களுக்கு எந்த வங்கி மலிவான கடனை வழங்குகிறது என்பதையும், பிற வங்கிகள் எவ்வளவு வட்டி வசூலிக்கின்றன என்பதையும் இந்த பதிவில் காணலாம். கார் வாங்க நீங்கள் காணும் கனவை நிஜமாக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும்.


ALSO READ: Cheapest 7 Seater Car: குறைந்த பட்ஜெட்டில் நல்ல கார் வாங்க செம்ம சான்ஸ் 


செகண்ட் ஹேண்ட் காருக்கு கடன் வாங்கும்போது வேறு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தற்போது, ​​பெரும்பாலான வங்கிகள் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு ரூ .5 லட்சம் வரை கடன் வழங்குகின்றன. பெரும்பாலான வங்கிகளின் கடன்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு இருக்கும். எனினும், சில வங்கிகள் கடனை திருப்பிச் செலுத்த ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கின்றன.


கனரா வங்கி அனைத்து வங்கிகளையும் விட மலிவான செகண்ட் ஹேண்ட் கார் கடனை வழங்குகிறது


பொதுத் துறை கனரா வங்கி  (Canara Bank) வட்டி விகிதத்தின் அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இங்கு 7.30 சதவீத வட்டியில், செகண்ட் ஹேண்ட் காருக்கு ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு பேங்க் ஆஃப் இந்தியா 7.45 சதவிகித வட்டியை வசூலிக்கிறது.


பஞ்சாப் நேஷனல் வங்கி செகண்ட் ஹேண்ட் கார் கடனை 8.30 சதவிகித வட்டியில் வழங்குகிறது. நீங்கள் இந்த கடனை எஸ்பிஐ-ல் பெற விரும்பினால், அதற்கு 9.20 சதவிகித வட்டி கட்ட வேண்டும்.


தனியார் வங்கிகளில், ஐசிஐசிஐ வங்கி மிகக் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. செகண்ட் ஹேண்ட் காருக்கு, 12 சதவீத வட்டி விகிதத்தில், ஐந்து லட்சம் வரை இந்த வங்கி உங்களுக்கு கடன் வழங்குகிறது. எச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி முறையே 13.75 சதவீதம் மற்றும் 14.55 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றன.


செகண்ட் ஹேண்ட் கார் லோன் எடுப்பதற்கு முன் இந்த விஷயங்களில் கவனம் இருக்க வேண்டியது அவசியமாகும்


- எந்தவொரு கடனுக்கும் வங்கி உங்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்கும் என்பது பல காரணிகளைப் பொறுத்தது. 


- மிக முக்கியமான காரணி உங்கள் கிரெடிட் ஸ்கோராகும். அதாவது இதுவரை நீங்கள் வாங்கிய கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளீர்கள் என்ற பதிவை வங்கி சரிபார்க்கும். 


- இது தவிர, வங்கிகள், கடனளிக்க வங்கிக் கட்டணம் மற்றும் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. 


- நீங்கள் ஒரு செகண்ட் ஹேண்ட் காருக்கு கடன் வாங்க திட்டமிட்டால், முதலில் நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியிடம் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். 


- உங்கள் தரவுகளின் அடிப்படையில் வங்கி உங்களுக்கு எந்த அளவிலான வட்டி விகிதத்தை வசூலிக்கும் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.


ALSO READ: Ola Electric மின்சார ஸ்கூட்டர்: மீண்டும் தொடங்கும் முன்பதிவு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR