Cheapest 7 Seater Car: குறைந்த பட்ஜெட்டில் நல்ல கார் வாங்க செம்ம சான்ஸ்

Cheapest 7 seater car in india: மாருதி சுசுகி ஈகோ (Maruti Suzuki Eeco) 2021 ஏப்ரல் மாதத்தில் 11,469 யூனிட்டுகளை விற்பனை செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2021, 06:03 PM IST
  • மலிவான 7 இருக்கைகள் கொண்ட கார் விவரம்
  • விலைகள் வெறும் ரூ .4.08 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன
  • மைலேஜ் சுமார் 20 KM என்று கூறப்படுகிறது
Cheapest 7 Seater Car: குறைந்த பட்ஜெட்டில் நல்ல கார் வாங்க செம்ம சான்ஸ் title=

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையில் என்ன நடக்கும் என்ற கூக்குரலுக்கு மத்தியில் இந்திய கார் சந்தை அதன் முந்தைய மகிமைக்கு திரும்பும் என்று நம்புகிறது. இந்த வைரஸை நாம் நீண்ட காலமாக சமாளிக்க வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, மக்கள் தற்போது  பொதுப் போக்குவரத்தில் குறைந்த நம்பிக்கையைக் காட்டுகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்டவர்கள் மலிவு விலையில் ஒரு காரைத் தேடுகிறார்கள். நிதாவகியில் இந்த பதிப்பில் அத்தகைய ஒரு காரின் (Maruti Suzuki) அம்சத்தை காண போகிறோம். 

ALSO READ | விரைவில் விற்பனைக்கு வரும் Maruti Suzuki இன் 3 புதிய எஸ்யூவிகள்

மாருதி சுஸுகி ஈகோ
Maruti Suzuki Eeco 2010 இல் அறிமுகம் ஆனது. சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுகையில், கடந்த மாதத்தில் அதாவது ஏப்ரல் 2021 இல், அதன் 11,469 யூனிட்டுகள் விற்கப்பட்டன. இந்த வாகனம் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்ட இரு வகைகளிலும் கிடைக்கிறது. இதன் விலை 4.08 லட்சத்திலிருந்து தொடங்கி சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் வரை செல்கிறது. இருப்பினும், அதன் 7 இருக்கைகள் கொண்ட பதிப்பை ரூ .4.37 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) எளிதாகப் பெறலாம்.

ஈகோ மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன், எஸ்-சிஎன்ஜி ஆப்சன்களுடன் இந்தியாவில் கிடைக்கிறது. பிஎஸ் 6 ஈகோவின் மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது. மொத்தத்தில் மல்டி பர்பஸ் வேன்கள் அதிக இட வசதியுடன் அதிகளவிலான லோடுகளை பாதுகாப்பாக ஏற்றி செல்லும் வகையில் இருக்கும். கூடுதலாக, சிக்னேச்சர் ஸ்லைடிங் டோர்களுடன், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் எளிதாக செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரைவர் சைடு ஏர்பேக்ஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் செண்சார்கள் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் பெல்ட் ரீமைண்டர் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம்களும் இடம் பெற்றுள்ளன.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News