புற்றுநோய் செல்களை தடுக்கும் முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் உண்பதன் மூலம் புற்றுநோய் செல் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல நன்மைகள் இருக்கின்றன.
தற்கால சமூகத்தில் புற்றுநோய் என்பது பரவலாக உருவாக ஆரம்பித்திருக்கிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்டவை எளிதாக தாக்குகின்றன. நாம் அன்றாடம் சேர்க்கும் உணவான முட்டைக்கோஸில் புற்று நோயை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.
மேலும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் படிக்க | நடந்தே எடையை குறைக்கலாம்!! ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்: எச்சரிக்கையாக இருங்கள்!!
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.
மேலும் படிக்க | Cholesterol Level: வயதிற்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ