Solar Eclipse 2022 Effect on Zodiacs: இந்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 அன்று நடைபெற உள்ளது. கிரகணம் என்பது ஒரு வகை வானியல் நிகழ்வு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரிய கிரகணத்தின் போது, ​​சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது. அதனால் சூரியக் கதிர்கள் பூமியை எட்டுவதில்லை. இந்த முழு நிகழ்வும் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 


ஜோதிடத்தில் சூரிய கிரகணம் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  


மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும் 


மேஷம்: பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கிரகண நாளில் இந்தப் பணம் சம்பந்தமான எந்த வேலையும் செய்வதைத் தவிர்க்கவும்.


ரிஷபம்: சூரிய கிரகண நாளில் தன்னம்பிக்கை குறையும். இந்த நாளில் தேவையற்ற கோபம் அல்லது மன அழுத்தத்தை தவிர்க்கவும்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள அசைவுகளைக் கண்காணிக்கவும். கவனமாக இருக்கவும்.


கடகம்: இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சூரிய கிரகணம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இது தவிர, கடக ராசிக்காரர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும்.


மேலும் படிக்க | மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பணம் கிடைக்கும். இருப்பினும், சூரிய கிரகணத்தின் போது, ​​எந்தவொரு நிதி முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். ,


கன்னி: சூரிய கிரகணத்தின் போது வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர, இந்த நேரத்தில் வேலையை மாற்ற முயற்சிக்காதீர்கள்.


துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சற்று எதிர்மறையாக இருக்கும். கிரகணத்தின் போது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவு ஏற்படலாம். சட்ட மோதல்களைத் தவிர்க்கவும்.
 
விருச்சிகம்: சூரிய கிரகணத்தால் உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், வியாபாரத்திலும் நிதிப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


தனுசு: ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கிரகணத்தின் போது அதீத நம்பிக்கையை தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் போது உங்கள் இயல்பை மென்மையாக வைத்திருங்கள்.


மகரம்: கிரகண காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். மேலும், பந்தயம் மற்றும் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர கடவுளின் ஸ்பெஷல் ஆசி - செல்வம் பெருகும்


கும்பம்: முதலீட்டில் நஷ்டம் ஏற்படலாம். குடும்பத் தகராறுகளால் மனம் கலங்கிவிடும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பொறுமையாக இருங்கள்.


மீனம்: சூரிய கிரகணம் நன்மை தரும். வியாபாரத்தில் செய்யப்படும் நிதி முதலீட்டின் மூலம் லாபம் கிடைக்கும். சமூக கௌரவம் கூடும். இது தவிர எதிரிகளை வெல்லலாம்.


(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR