ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும்

ஜூலை 2022 இல், மேஷ ராசியில் ராகு பெயர்ச்சி  ஏற்படப்போகிறது மற்றும் அக்டோபர் 30, 2023 வரை, இந்த பெயர்ச்சி இந்த ராசியில் இருக்கும்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 1, 2021, 02:45 PM IST
ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும்

புதுடெல்லி: ஜோதிடத்தின் படி, ராகுவுக்கு உடல் இருப்பு இல்லை, ஆனால் இது இருந்தபோதிலும், அதன் இடமாற்றம் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி வேத ஜோதிடத்தில் ராகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனிக்கு அடுத்தபடியாக மெதுவாகச் செல்லும் கிரகம் இதுவாகும். இந்த கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும்.

இந்த கிரகம் பிற்போக்கு இயக்கத்தில் நகர்கிறது. ராகு 2022 ஜூலை 12 ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறது, இந்த கிரகம் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும்.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும். திடீர் பணம் வரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ப்ரோமோஷன் ஆகும். வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நல்ல வேலை வாய்ப்புகள் வரலாம். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடன் சுமை தீரும். 

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல பணம் கிடைக்கும். நீங்கள் திடீரென்று பணம் பெறலாம். பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையை மாற்றும் மனநிலையில் இருந்தால், நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க முடியும்.

விருச்சிகம்: ராகுவின் சஞ்சாரம் உங்கள் தொழிலுக்கு சாதகமாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். சம்பளம் உயரும் வாய்ப்பு உண்டு. பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக இருக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் பணம் சம்பாதிக்க வலுவான வாய்ப்புகள் உள்ளன.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News