சூரிய கிரகணம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன் தரும்

சூரிய கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 08 நிமிடங்கள் ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 11:13 AM IST
சூரிய கிரகணம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன் தரும் title=

புதுடெல்லி: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று காலை 11.59 மணிக்கு தொடங்க உள்ளது. இது பிற்பகல் 03.07 வரை இருக்கும். இதனுடன், இந்த சூரிய கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 08 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாவிட்டாலும், சில ராசிகளில் சிறய சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse) கேட்டை மற்றும் விருச்சிக நட்சத்திர மண்டலத்தில் நிகழும். ஜோதிடர்களின் (Zodiac Sign) கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சூரிய கிரகணத்தில் (Solar Eclipse 2021), சூரியன் கேதுவுடன் இணையும். 

ALSO READ:ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும் 

இது தவிர சந்திரனும் புதனும் கூடி வருகிறார்கள். பொதுவாக, சூரியன்-கேதுவுடன் (Surya-Ketu) இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த சூரிய கிரகனத்தின் போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், மேலும் அசுப பலன்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் இருக்கும்

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் சாதகமாக இருக்காது. கிரகணத்தின் அசுப பலன் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம். விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்: இந்த கிரகணம் மங்களகரமானதாக இருக்கும். சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு கிரகணம் அசுபமாக அமையும். குழந்தையைப் பற்றிய கவலை இருக்கும். நண்பர்களுடன் காரணமின்றி வாக்குவாதம் ஏற்படும்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்களின் கவலைகள் நீங்கும். மேலும், நீண்ட நாட்களாக நீங்கள் சிக்கியிருந்த ஒரு பெரிய சர்ச்சையிலிருந்தும் விடுபடுவீர்கள். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் தீரும்.

கன்னி: நல்ல பலன் தரும். வலிமையும் தைரியமும் கூடும். நண்பர்களின் நிதி உதவியைப் பெறுவீர்கள்.

துலாம்: இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையப் போகிறது. உரையாடலில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் பாதிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: தொழில்-வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.  எந்த ஒரு வேலையிலும் கவனமாக முடிவெடுக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுப்பது தீங்கு விளைவிக்கும்.

தனுசு: கிரகணத்தால் அசுப பலன்கள் உண்டாகும். அதிக பணம் செலவாகும். வெளியூர் பயண யோகம் உண்டு. தேவையில்லாத அலைச்சல் இருக்கலாம்.

மகரம்: தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அனுகூலத்தைப் பெறுவீர்கள். திடீர் பண ஆதாயத் தொகையும் உண்டு.

கும்பம்: அன்புக்குரியவர்களால் பொருளாதார ரீதியாகவும் பயனடைவதற்கான வாய்ப்பு உள்ளது. நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் தீரும்.

மீனம்: இந்த கிரகணம் அசுபமாக இருக்கும். திருமண வாழ்க்கை அல்லது அது தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், எந்த முடிவை எடுக்கும்போதும் பல முறை யோசித்து இறுதி முடிவை எடுப்பது நல்லது.

ALSO READ:வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News