மத்திய அரசு தற்போது திருத்தியமைத்துள்ள சில புதிய விதிகளின் மூலம் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.  அதன்படி இனிமேல் நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று வாகனம் ஓட்டும் சோதனையை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை.  இதற்கென ஒரு நாளை ஒதுக்கி நீண்ட வரிசையில் கால் நோக நிற்க வேண்டிய அவசியமும் இனி எவருக்கும் ஏற்படாது.  மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, வாகன ஓட்டிகள் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆர்டிஓ-வின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும் வேண்டாம், அவரிடம் நீங்கள் வாகனத்தை ஒட்டி காட்டவும் வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கவும்; எளிமையான செயல்முறை இதோ


மத்திய அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, நீங்கள் ஆர்டிஓவிடம் செல்லாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நீங்கள் டிரைவிங் லைசென்சுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.  ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் அவர்கள் பயிற்சி பெற்று அங்கு நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அதன்பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பள்ளி மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.  இந்த சான்றிதழின் அடிப்படையாக கொண்டு பதிவு செய்த விண்ணப்பதாரருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்.  மேலும் அமைச்சகம் பயிற்சி பள்ளிகளுக்கான சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது, அதனை பற்றி பின்வருமாறு காண்போம்.



1) இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகன பயிற்சி மையங்கள் குறைந்தபட்சம் 1 ஏக்கர் அளவில் இடம் அமைந்திருக்க வேண்டும்.  அதேபோல கனரக வாகனங்களுக்கு 2 ஏக்கர் அளவில் இடம் அமைந்திருக்க வேண்டும்.


2) வாகன ஓட்டிகளுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 5 வருடம் இப்பணியில் அனுபவம் பெற்றவராக இருப்பதோடு சாலை விதிகளை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.


3) இதற்கென்று அமைச்சகம் பாடத்திட்டத்தையும் வகுத்துள்ளது.  அதன்படி, இலகுரக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 4 வாரங்கள் 29 மணி நேரம் வரை வகுப்பு நீடிக்கிறது, மேலும் இவை கோட்பாடு மற்றும் செய்முறை என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


4) பயிற்சி பெறுபவர்கள் சாதாரண சாலைகள், கிராமப்புறச் சாலைகள், நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள், ரிவர்சிங் மற்றும் பார்க்கிங், மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் சுமார் 21 மணி நேரம் வாகனங்களை ஒட்டி பயிற்சி பெற வேண்டும்.  மேலும் இந்த பாடத்திட்டத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு சாலை விதிகள், விபத்துக்கான காரணங்களை கற்றல், போக்குவரத்து கல்வி, முதலுதவி, எரிபொருள் சிக்கனம் போன்றவை கற்பிக்கப்பட வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வைத் தொடர்ந்து பிற கொடுப்பனவுகளிலும் உயர்வு, ஊதியத்தில் பம்பர் ஏற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR